பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜய் – காவல்துறையினர் அனுமதி….
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பரந்தூரை சுற்றி 5,100 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 900 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.
பல்வேறு கட்ட போராட்டங்களை இவர்கள் முன்னெடுத்து வரும் நிலையில், போராட்டக்குழுவினரை சந்திக்க உள்ளதாக தவெக தலைவர் விஜய் அண்மையில் அறிவித்தார். ஜனவரி 19 அல்லது 20இல் பரந்தூர் செல்ல அனுமதி கேட்டு மாவட்ட காவல் கண்கணிப்பாளரிடமும் மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நாளை மறுநாள் விஜய் பரந்தூர் செல்ல காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
