thirupparangundram

ஆன்மீகம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரம் : உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத் துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், துாணிலும் தீபத்தை ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதை எதிர்த்து கோயில் நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அந்த மனுக்களை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது.
அப்போது, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூண் இருந்ததற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் இல்லை என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேநேரம் 1961 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் கோவில் தேவஸ்தானம் வெளியிட்ட புத்தகத்தில், மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றியதாக குறிப்பிடப்பட்டு இருப்பதாக கூறி அதற்கான ஆவணத்தை மனுதாரர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில், தனி நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More