tamilcinema

சினிமாதமிழ்நாடுதொழில்நுட்பம்

தனுஷின் ‘அம்பிகாபதி’ ரீ-ரிலீஸ் சர்ச்சை!‘ஏஐ’ க்ளைமாக்ஸ் 

தனுஷ் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு இந்தியில் வெளியான படம் ‘ராஞ்சனா’. இந்தப் படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கியிருந்தார். இந்தப் படம் தமிழில் டப் செய்யப்பட்டு ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் வெளியானது.
படம் இருமொழிகளிலும் வரவேற்பை பெற்றது. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய பார்வையாளர்களை திரையரங்குக்கு வர வைக்கும் வகையில், படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி ஏஐ தொழில்நுட்பத்துடன் மாற்றப்பட்டது குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது படத்தின் க்ளைமாக்ஸில் தனுஷ் இறந்துவிடுவார். ஆனால் ஏஐ துணையுடன் அவர் மீண்டும் உயிர்பெற்று வருவது போல க்ளைமாக்ஸ் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கு படத்தின் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் கண்டனம் தெரிவித்தார். படைப்பு சுதந்திரத்துக்கு எதிரானது என்றும், படத்தின் ஆன்மாவை சிதைக்கும் செயல் என்றும் அவர் கடுமையாக சாடியிருந்தார். இந்த சூழலில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஈரோஸ் நிறுவனம் இந்த புதிய பதிப்பு முந்தைய படைப்பின் மாற்றமல்ல, கலையின் புது வடிவம் மட்டுமே என விளக்கமளித்துள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள Eros Media World குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரதீப் திவேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “‘அம்பிகாபதி’ (Raanjhanaa) திரைப்படத்தின் முழுமையான பதிப்புரிமை மற்றும் தயாரிப்பு உரிமை எங்கள் நிறுவனத்திடம் உள்ளது. அதனால், நாங்கள் சட்டப்பூர்வமாக இதைப் புதுப்பித்து வெளியிட அதிகாரம் பெற்றுள்ளோம்.
முன்னோடியான தொழில்நுட்பமான ஜெனரேட்டிவ் AI மூலம், படத்தின் சில அம்சங்களைப் புதுப்பித்து, புதிய பார்வையாளர்களைச் சென்றடையும் வகையில், ஒரே நேரத்தில் அந்த படத்தின் கலையுணர்வையும் பாதுகாக்கும் நோக்கத்தில் மட்டுமே இந்த முயற்சி செய்யப்பட்டுள்ளது. இது ‘புதிய பதிப்பாக’ தனியாகவும், தெளிவாகவும் குறியிடப்பட்டுள்ளது – இது அடிப்படை படைப்பின் மாற்றமல்ல, ஒட்டுமொத்தத்தை மாற்றுவதுமல்ல. இது ஒரு கலையின் புதிய வடிவம்.
இது கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் முயற்சியாகவும், புதிய தொழில்நுட்பங்களைக் கலையுடன் இணைக்கும் முயற்சியாகவும் பார்க்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
இந்தியாசினிமாதமிழ்நாடு

நான் ஒரு மிடில் கிளாஸ் தான்; பத்ம பூஷன் விருது பெற்ற அஜித், ரசிகர்களுக்கு நன்றி!

பத்ம பூஷன் விருது வென்ற நடிகரும் கார்பந்தய வீரருமான அஜித்குமார் சென்னை விமான நிலையம் வந்த நிலையில், அவருக்கு ரசிகர்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அனைவருக்கும் நன்றி தெரிவித்த அஜித், விரைவில் நேரில் சந்திப்போம் என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்தை முன்னிட்டு, பத்மபூஷன், பத்மஸ்ரீ, உள்ளிட்ட பல்வேறு விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பத்ம பூஷன் விருது நடிகரும், விளையாட்டு வீரருமான அஜித்குமாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நடன கலைஞரும் நடிகையுமான, ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

கலைத்துறையில் குருவாயூர் துரை, சமையல் கலைஞர். செப் தாமோதரன், பத்திரிக்கையாளர் லட்சுமிபதி ராமசுப்பையர், எம்.டி.ஸ்ரீனிவாஸ், புரசை கண்ணப்பா சம்பந்தம், கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஆர்.ஜி.சந்திரமோகன், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, சீனி விஸ்வநாதன், வேலு ஆசான் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட இந்த விருதுகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, நடிகர் அஜித்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்ம பூஷன் விருதை வழங்கி கவுரவித்தார். இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், ரசிகர்கள், நெட்டிசன்கள், அரசியல் தலைவர்கள், சக நடிகர்கள் என பலரும் அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமார் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு ரசிகர்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Read More
சினிமாதமிழ்நாடு

 நடிகர் அஜித் குமார், கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு இன்று பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது..!

கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை செலுத்திய நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது குடியரசு தலைவரால் இன்று வழங்கப்படுகிறது.
நாட்டில் கலை, அறிவியல் சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம்,கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயிரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஷ்வின், நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா உள்ளிட்டவர்களுக்கு இன்று பத்ம விருதுகள் குடியரசு தலைவர் திரௌபதி முர்மூவால் வழங்கப்படுகிறது.
கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை செலுத்திய நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது குடியரசு தலைவரால் இன்று வழங்கப்படுகிறது.
நாட்டில் கலை, அறிவியல் சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம்,கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயிரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஷ்வின், நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா உள்ளிட்டவர்களுக்கு இன்று பத்ம விருதுகள் குடியரசு தலைவர் திரௌபதி முர்மூவால் வழங்கப்படுகிறது.
கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை செலுத்திய நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது குடியரசு தலைவரால் இன்று வழங்கப்படுகிறது.
நாட்டில் கலை, அறிவியல் சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம்,கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயிரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஷ்வின், நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா உள்ளிட்டவர்களுக்கு இன்று பத்ம விருதுகள் குடியரசு தலைவர் திரௌபதி முர்மூவால் வழங்கப்படுகிறது.

Read More
சினிமாதமிழ்நாடு

இந்த ஆண்டில் இதுவரை வெளியான 45 தமிழ் படங்களில் 4 படங்கள் மட்டும் தான் ஹிட்.. என்ன படங்கள்?

2025-ம் ஆண்டு தொடங்கி 3-வது மாதத்தில் இருக்கிறோம். இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான பல படங்கள் தோல்வியை தழுவின. சில படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
அந்த வகையில் இந்த ஆண்டு இதுவரை 45 படங்கள் தமிழில் வெளியானதாகவும், அதில் 4 படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக வெற்றியடைந்துள்ளதாகவும், தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார். அது என்ன படங்கள் என்பது குறித்து பார்ப்போம்.
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்த படம் ‘மதகஜராஜா’. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் மொத்தமாக ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜனவரி 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘குடும்பஸ்தன்’. நக்கலைட்ஸ் யூடியூப் குழுவினரின் வெள்ளித்திரை முயற்சியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.8 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.30 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘விடாமுயற்சி’. த்ரிஷா, அர்ஜுன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் அனிருத் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும், திரையரங்குகள், டிஜிட்டல் ரைட்ஸ் உள்ளிட்டவற்றில் வசூல் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் பிப்ரவரி 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘டிராகன்’. அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். ரூ.36 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.50 கோடியை தாண்டி வசூலித்து வருகிறது.

Read More
சினிமா

சுந்தர்.சி – வடிவேலுவின் ‘கேங்கர்ஸ்’.. எதிர்பார்க்கப்படும் காம்போ.. எப்போது ரிலீஸ்

சுந்தர்.சி – வடிவேலுவின் ‘கேங்கர்ஸ்’.. எதிர்பார்க்கப்படும் காம்போ.. எப்போது ரிலீஸ்
சுந்தர்.சி – வடிவேலு காம்போவில் உருவாகியுள்ள ‘கேங்கர்ஸ்’ படம் வரும் ஏப்ரல் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘அரண்மனை 4’ வெற்றிக்குப் பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கேங்கர்ஸ்’. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்தை இயக்கிய சுந்தர்.சி நாயகனாகவும் நடித்துள்ளார்.
மேலும் படத்தை அவரே தயாரித்துள்ளார். இதில் சிங்காரம் கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்துள்ளார். கத்ரீன் தெரசா, முனீஸ்காந்த், பக்ஸ், மைம் கோபி, ஹரிஷ் பேரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தப் படம் வரும் ஏப்ரல் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விநியோகஸ்தர்கள் இதன் தமிழக உரிமையைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

Read More
சினிமாதமிழ்நாடு

‘Bad Girl’ படத்திற்கு தணிக்கை சான்று கேட்டு மனு: படத்தை தொடரும் சர்ச்சைகள்..!

‘Bad Girl’ படத்திற்கு தணிக்கை சான்று கேட்டு மனு: படத்தை தொடரும் சர்ச்சைகள்..!
Bad girl திரைப்படத்திற்கு தணிக்கை சான்று கேட்டு, இதுவரை எந்த விண்ணப்பமும் வரவில்லை என தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.
இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்த வர்ஷா பாரத் இயக்கியுள்ள திரைப்படம் ‘Bad Girl’. இந்தப் படத்தை வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ளனர். படத்துக்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். படத்தில் அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹாரூன், Teejay அருணாசலம், சஷாங்க் பொம்மிரெட்டிப்பள்ளி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

டின்ஏஜ் பெண் ஒருவரின் மன ஓட்டங்களையும், காதலையும், உணர்வுகளையும் வெளிபடுத்தும் விதமாக இருந்த டீசரில், பாலியல் உணர்வுகள் சார்ந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் விவாதங்களை எழுப்பின. ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விருது 2025-க்கான மிக உயரிய விருதாக கருதப்படும் NETPAC விருதினை வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘Bad Girl’ திரைப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்த படத்துக்கு சென்சார் சான்று வழங்க கூடாது என ராஷ்டிரிய சனாதன சேவா சங்கத்தின் தலைவர் ராமநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது குறிப்பிட்ட சமூகத்தையும், பெண்களையும் அவமதிக்கும் விதத்தில் bad girl திரைப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது சட்ட விரோதமானது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Read More
சினிமா

விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் கதையில் ஷாம்.. ‘அஸ்திரம்’

ஷாம் நடிக்கும் ‘அஸ்திரம்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. க்ரைம் த்ரில்லர் களத்தில் உருவாகியுள்ள காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
அரவிந்த் ராஜகோபால் இயக்கத்தில் ஷாம் நடித்துள்ள படம் ‘அஸ்திரம்’. நடிகர் ஷாம் உடன் நிரஞ்சனி, நிழல்கள் ரவி, அருள் டி ஷங்கர், ஜீவா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

‘பொம்மை நாயகி’ படத்துக்கு இசையமைத்த சுந்தரமூர்த்தி இப்படத்திற்கும் இசையமைக்கிறார். தன ஷண்முகமணி இப்படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Read More
சினிமாதமிழ்நாடு

“2K லவ்ஸ்டோரி” டிரெய்லர் வெளியீட்டு விழா !!

“2K லவ்ஸ்டோரி” டிரெய்லர் வெளியீட்டு விழா !!

இயக்குநர் சுசீந்திரனின் “2K லவ்ஸ்டோரி” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2K லவ்ஸ்டோரி”. Creative Entertainers சார்பில் தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்.

வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன் பேசியதாவது…
இது எங்கள் முதல் படம். தனஞ்செயன் சார் எங்கள் படத்தைப் பார்த்து விட்டு, நானே ரிலீஸ் செய்கிறேன் என எடுத்துக்கொண்டார். மகிழ்ச்சி. சுசி சார் அவரில்லாமல் இந்தப்படம் இல்லை, மிக அட்டகாசமாகப் படத்தை எடுத்துள்ளார். இமான் சார் படத்தை முழுதாக தாங்கியிருக்கிறார். நண்பன் ஜெகவீர் நாயகனாக அறிமுகமாகிறார், மீனாட்சி நன்றாக நடித்துள்ளார். சரவணன் பிரதர் நன்றாக நடித்துள்ளார். ஜேபி சார், சிங்கம் புலி சார் எல்லோரும் அருமையாக நடித்துள்ளார்கள். படம் மிக அருமையாக வந்துள்ளது. இது எல்லோருடைய உழைப்பு. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது…
சுசீந்திரன் அண்ணாவின் முதல் படத்தில் பாடல் எழுதினேன். இடையில் பல காலம் எழுதவில்லை, இப்போது இப்படத்தில் பாடல் எழுதியுள்ளேன். எத்தனை இடைஞ்சல்கள் வந்தாலும் மிகத் தன்மையான மனிதனாக இமான் இருக்கிறார். இதில் எல்லாப்பாடல்களும் நான் எழுதியுள்ளேன், ஒரு பாடல் மட்டும் யுகபாரதி எழுதியுள்ளார். மனித மனங்களின் உணர்வுகளை மிக ஆழமாகப் பேசுகிறது இந்த டிரெய்லர். படத்தில் உழைத்த அனைவருக்கும் இப்படம் வெற்றிப்படமாக அமையட்டும் வாழ்த்துக்கள்.

நடிகை லத்திகா பேசியதாவது…
இப்படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும், நீங்கள் டிக்கெட் எடுத்த காசு வீணாகாது. நான் இந்தப்படத்தில் மிக நல்ல ரோலில் நடித்துள்ளேன். இந்த வாய்ப்பைத் தந்த இயக்குநர் சுசீந்திரன் சாருக்கு நன்றி. என்னை அழகாகக் காட்டிய ஆனந்த் சாருக்கு நன்றி. எனக்கு ஊக்கம் தந்த அம்மா அப்பாவுக்கு நன்றி. படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகை வினோதினி வைத்தியநாதன் பேசியதாவது..,
இது நன்றி தெரிவிக்கும் மேடை, அறிமுக தயாரிப்பாளர் விக்னேஷ், இந்த வயதில் இப்படி ஒரு கதையைத் தயாரிக்க நினைத்த விக்னேஷ் அவர்களுக்கு நன்றி. இப்படத்தை முன்னெடுத்துச் செல்லும் தனஞ்செயன் சாருக்கு நன்றி. ஈஸ்வரன் படத்திற்குப் பிறகு, சுசீந்திரன் சாரின் கம்பெனி ஆர்டிஸ்டாக நான் மாறிவிட்டேன். இந்தப்படத்தில் சின்ன கதாப்பாத்திரம் என்றாலும் மிக நல்ல கதாப்பாத்திரம். சுசீந்திரன் சார், காதலைக் கையாள்வதைப் பார்க்கப் பிரமிப்பாக இருக்கும். இளமையாக இனிமையாக இப்படத்தில் காதலைக் காட்டியுள்ளார். என்னுடன் இப்படத்தில் பயணித்த திரைக்கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இமான் இசை, கார்த்திக் நேத்தா வரிகளில் பாடல்கள் இந்தக்கால இளைஞர்களைக் கவரும். பிப்ரவரி 14 இப்படம் திரைக்கு வருகிறது. கண்டிப்பாக இந்தப்படம் பெரிய வெற்றி பெறும். நன்றி.

நடிகர் முருகானந்தம் பேசியதாவது..,
2K லவ் ஸ்டோரியில் எனக்கென்ன வேலை எனக் கிண்டல் பண்ணினார்கள். ஆனால் எல்லாம் சுசி சாரின் வேலை தான். இமான் சார் இசையில் படம் இயக்க நினைத்தேன், நான் நடித்த காட்சிக்கு இசையமைத்துள்ளார் என்பது பெருமை. இப்போது ஜாலியாக இருக்கலாம் ஆனால், வெண்ணிலா கபடிக்குழு படத்தில் சுசி சார் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என தெரிகிறது. கண்டிப்பாக இந்தப்படம் அவர் மனதுக்காகப் பெரிய வெற்றி பெறும். அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் நடிகர் பாக்யராஜ் கண்ணன் பேசியதாவது..,
2K கிட்ஸ் படத்தில், நான் 90 கிட்ஸாக நடித்துள்ளேன். சுசி சார் போன் செய்து பிரதர் ஃப்ரீயா எனக்கேட்டார், நடிக்க வரலாமே என்றார். என்னை நம்பி கூப்பிடுகிறாரே என உடனே நடிக்கப் போய் விட்டேன். அவ்வளவு அழகாகப் படத்தை எடுத்துள்ளார். இந்த படத்திற்கு ஆபிஸே போடவில்லை, என்னை ஜூடியோவிற்கு கூப்பிட்டு, அங்கு தான் டெஸ்ட் எடுத்தார் இயக்குநர். படம் முழுக்க ஃபன்னாக இருந்தது. விக்னேஷ் பிரதர் இவ்வளவு பெரிய படத்தை, நல்ல கதையை நம்பி எடுத்துள்ளார். நன்றி. இந்தப்படம் தனஞ்செயன் சார் கைக்குப் போய் விட்டது என்றவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. சுசி சார் எதோ குளத்து வேலைக்கு ஆள் பிடிப்பது போல்,காட்சி அமைப்பு, மீதம் திரையில் காணுங்க

Read More
சினிமாதமிழ்நாடு

‘விஜய் 69’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் எப்போது? – வெளியான அப்டேட்

விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘தளபதி 69’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
‘தி கோஸ்ட்’ படத்துக்கு பிறகு நடிகர் விஜய், ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Read More
சினிமா

பாரதிராஜா – நட்டி- ரியோ ராஜ் – சாண்டி- கூட்டணியில் உருவாகும் ‘நிறம் மாறும் உலகில் ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘ நிறம் மாறும் உலகில் ‘ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் பிரிட்டோ J B இயக்கத்தில் உருவாகி வரும் ‘ நிறம் மாறும் உலகில் ‘ எனும் திரைப்படத்தில் பாரதிராஜா, நட்டி என்கிற நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர் , விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், நிவாஸ் ஆதித்தன், சல்மா, சுரேஷ் மேனன், ‘ஆடுகளம்’ நரேன், மைம் கோபி , வடிவுக்கரசி , விக்னேஷ் காந்த், ரிஷிகாந்த், கனிகா, ஆதிரா, காவ்யா அறிவுமணி ,துளசி, ஐரா கிருஷ்ணன் , லிசி ஆண்டனி, நமோ நாராயணன் , சுரேஷ் சக்கரவர்த்தி , ஏகன், விஜித், ஜீவா சினேகா, திண்டுக்கல் சரவணன், பாலாஜி தயாளன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மல்லிகா அர்ஜுன்- மணிகண்ட ராஜா ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவ் பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ராம் -தினேஷ் – சுபேந்தர் -ஆகிய மூவர் கலை இயக்குநர்களாக பணியாற்றி இருக்கும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் ஏற்றிருக்கிறார். ஹைபர் லிங்க் பாணியிலான இந்த திரைப்படத்தை சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

நான்கு விதமான வாழ்க்கை – நான்கு கதைகள் – அதை இணைக்கும் ஒரு புள்ளி – என நம் வாழ்வில் உறவுகளின் அவசியத்தை உணர்வுபூர்வமாக விவரிக்கும் கமர்சியல் படமாக இப்படம் உருவாகி இருக்கிறது. மும்பை – வேளாங்கண்ணி – சென்னை- திருத்தணி – என நான்கு வெவ்வேறு களங்களில் இப்படத்தின் கதை நடைபெறுகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்திருக்கிறது என பிரத்யேக காணொளியை வெளியிட்டுள்ளனர். இந்த காணொளி மூலம் படத்தின் தரம் சர்வதேச அளவில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கி இருக்கிறது என்றும்,
விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தனித்துவமான கதை சொல்லும் பாணியில் உருவாகும் ‘நிறம் மாறும் உலகில்’ எனும் படைப்பில் பாரதிராஜா -நட்டி -ரியோ ராஜ் -சாண்டி மாஸ்டர்- ஆகிய திறமைசாலிகள் ஒன்றிணைந்திருப்பதால் .. இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

https://youtu.be/gX-hhMcw4Pg

Read More