SIR

அறிவியல்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

SIR-நீக்கப்பட்டவர்கள் எப்படி விண்ணப்பிப்பது? – அர்ச்சனா பட்நாயக் விளக்கம்

“வரைவு வாக்காளர்களின் எண்ணிக்கை, 5 கோடியே 43 லட்சத்து 76,755 பேர் இடம் பெற்றுள்ளனர். மொத்தமாக 97,37,831 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன” என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்களிலும், மூன்று யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த நவம்பர் 4ஆம் தேதி தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளை தேர்தல் ஆணையம் துவங்கியது.
அதன்படி கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி டிசம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று முதலில் மாவட்டங்கள் வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
“வரைவு வாக்காளர்களின் எண்ணிக்கை, 5 கோடியே 43 லட்சத்து 76,755 பேர் இடம் பெற்றுள்ளனர். மொத்தமாக 97,37,831 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன” என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்களிலும், மூன்று யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த நவம்பர் 4ஆம் தேதி தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளை தேர்தல் ஆணையம் துவங்கியது.
அதன்படி கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி டிசம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று முதலில் மாவட்டங்கள் வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
எஸ்.ஐ.ஆரில், இறந்தவர்களின் எண்ணிக்கை 26,94,672, இடம் பெயர்ந்தவர்கள் 66,44,881, இரட்டைப் பதிவு 3,39,278 எனத் தெரியவந்துள்ளது. பட்டியலில் இடம் பெறாதவர்கள் பி.எல்.ஓ, இ.ஆர்.ஓ, சாவடி முகவர்கள் அல்லது ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமின்றி இரண்டு வார இறுதி நாளில் அனைத்து பூத்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்த இருக்கிறோம். அந்த முகாமில் அவர்கள் விண்ணப்பிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

SIR பட்டியல் இன்று வெளியாகிறது… உங்கள் பெயரை பார்ப்பது எப்படி?

தமிழ்நாட்டில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்வது எப்படி, பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்.
பிகாரை தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்த பணிகள் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 14 ஆம் தேதியுடன் நிறைவடைந்தன. புதுச்சேரி, மேற்கு வங்க மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் நாளை வெளியிடப்படுகிறது.
வாக்காளர்கள் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றிருந்தவர்கள் முதலில் தங்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை தேர்தல் ஆணையத்தின் voters.eci.gov.in என்ற இணையதளம் மற்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில், தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து பார்த்துக் கொள்ளலாம்.
மேலும் நீக்கப்பட்டவர்களின் விவரம் மற்றும் அதற்கான காரணங்களை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயரைச் சேர்க்க படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். புதிதாக சேர விரும்புவோரும் இதே படிவத்தை வழங்க வேண்டும். இணையதளம் மூலமாகவும் பெயர் சேர்ப்பு படிவங்களை சமர்ப்பிக்கலாம்.
தேர்தல் ஆணைய அறிவுறுத்தல் படி ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் தலா 50, படிவம்-6 இருக்கும். அவர்களிடமிருந்து படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அவர்களிடமே திருப்பி வழங்கலாம்.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் டிசம்பர் 19 ஆம் தேதி முதல் ஐனவரி 18 ஆம் தேதி வரை ஆட்சேபங்கள் இருந்தாலும் தெரிவிக்கலாம். வாக்காளர் பெயர் சேர்த்தல் மட்டும் இல்லாது, ஏற்கெனவே உள்ள பதிவுகள் குறித்த மறுப்புகளையும் தெரிவிக்கலாம். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றவர்கள் முகவரி மாற்றம் செய்ய மற்றும் தொகுதி மாறுவதற்கு படிவம் 8ஐ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கப்படும் புதிய விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களின் பெயர்கள் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்மாவட்டம்

எஸ்.ஐ.ஆர் படிவத்தில் உறவினர் பெயர் கட்டாயமில்லை: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க டிசம்பர் 4-ம்தேதி வரை மட்டுமே கால அவகாசம் உள்ளது என்றும், அதற்குள் படிவத்தை சமர்ப்பிக்காதவர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் எச்சரித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
வாக்காளர்கள் உரிமை கோரலுக்கு டிச.9 – ஜன.8 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் 6.41 கோடி வாக்காளர்களில் 6.23 கோடி வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுவிட்டன.
சிறப்புத் தீவிர திருத்தப் பணியை வெற்றிகரமாக முடிப்பதற்காக 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் 68,467 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் எனத் தேர்தல் துறை முழு வீச்சில் களமிறங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 6.41 கோடி வாக்காளர்களில், இதுவரை 6.23 கோடி வாக்காளர்களுக்குக் கணக்கீட்டு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

வாக்காளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள்:

கணக்கீட்டு படிவங்களைப் பெற்ற வாக்காளர்கள் கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க, டிச.4 வரை காத்திருக்காமல் உடனடியாகப் பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர், உதவி மையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். டிசம்பர் 4-ம் தேதிக்குள் கணக்கீட்டு படிவத்தைச் சமர்ப்பிக்காத வாக்காளர்களின் பெயர்கள், டிச.9 அன்று வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது.

3 முறை அதிகாரிகள் வீடு தேடிச் சென்றும் கணக்கீட்டு படிவம் வழங்க முடியாத வாக்காளர்களின் பெயர்களும் வரைவுப் பட்டியலில் இடம்பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெயர் விடுபட்டால் என்ன செய்வது?

வரைவுப் பட்டியலில் பெயர் இல்லை என்றால், படிவம் 6-உடன் உறுதிமொழிப் படிவத்தை இணைத்துப் புதிதாக விண்ணப்பிக்கலாம். 2002/2005 வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரையோ, உறவினர் பெயரையோ கண்டறிய முடியாதவர்கள், பிற விவரங்களை நிரப்பி டிசம்பர் 4-க்குள் படிவத்தை ஒப்படைத்தால், அவர்களது பெயர் வரைவுப் பட்டியலில் சேர்க்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட 12 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 2,44,685 வாக்குச்சாவடி நிலை முகவர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு முகவர் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 50 கணக்கீட்டு படிவங்களை மட்டுமே உறுதிமொழியுடன் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுவர்.

முக்கியத் தேதிகள் (Timeline)

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 09.12.2025

பெயர் சேர்த்தல்/நீக்கல்/திருத்தம் (Claims and Objections): 09.12.2025 முதல் 08.01.2026 வரை.

விசாரணை காலம் (Notice Phase): 09.12.2025 முதல் 31.01.2026 வரை.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 07.02.2026.

வாக்காளர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து, இந்த ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு தலைமை தேர்தல் அதிகாரி கேட்டுக்கொண்டு உள்ளார்.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்மாவட்டம்

SIR | வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டால்..? – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டால், அதற்கான காரணம் தொடர்புடைய வாக்குச்சாவடியில் ஒட்டப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி (CEO) அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். மேலும், பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 4-ம் தேதிக்கு பிறகு அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்ற வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்த பணி (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் 68,470 பிஎல்ஓக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட 83,256 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அரசியல் கட்சிகள் சார்பில் பிஎல்ஏக்கள் 2,45,340 பேர் நியமிக்கப்பட்டு, எஸ்ஐஆர் பணிக்கு உதவி வருகின்றனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இவ்வளவு பிஎல்ஏக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 33,000 தன்னார்வலர்கள் உதவி செய்து வருகின்றனர். இதுவரை 6.16 கோடி படிவங்கள் (96 சதவீதம்) வாக்காளர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. இதில் 50 சதவீத படிவங்கள், பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டுள்ளன. அதில் 2.59 கோடி படிவங்கள் (40%) கணினியில் பதிவேற்றப்பட்டுள்ளன.

327 பிஎல்ஓக்கள் தங்கள் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்துள்ளனர். சென்னையில் 96 சதவீத படிவங்கள் கொடுக்கப்பட்டு, 50 சதவீத படிவங்கள் திரும்ப பெற்று, 30 சதவீத வடிவங்கள் கணினியில் ஏற்றப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஏற்கெனவே வாக்காளர்களாக இருப்பவர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. வாக்காளர்கள் தங்களால் முடிந்த விவரங்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம். மீதம் உள்ளவற்றை பூர்த்தி செய்ய பிஎல்ஓக்கள், தன்னார்வலர்கள் உதவுவார்கள். பிஎல்ஓக்களுக்கு அதற்கான செயலிகள் வழங்கப்பட்டுள்ளன.
உரிய விவரங்கள் இல்லை என படிவத்தை கொடுக்காமல் இருந்து விடக்கூடாது. உரிய காரணமின்றி தகுதியான வாக்காளர்கள் ஒருவரின் பெயரும் பட்டியலில் இருந்து நீக்கப்படாது. வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டால், அதற்கான சரியான காரணம், அந்தந்த வாக்குச்சாவடிகளில் ஒட்டப்படும். தேர்தல் ஆணைய இணையதளத்திலும் வெளியிடப்படும்.

இறப்பு, வீடுகளில் இல்லாதவர்கள், நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடியேறியவர்கள், இரட்டை வாக்குரிமை வைத்திருப்பவர்கள், படிவத்தை பெற்றுச் செல்லாதவர்கள் அல்லது பூர்த்தி செய்து திருப்பி தராதவர்கள் ஆகிய 5 காரணங்களில் ஏதேனும் ஒரு காரணம் இருந்தால் மட்டுமே பெயரை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று தெளிவான அறிவுறுத்தல்கள் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4-ம் தேதி வரை மட்டுமே பூர்த்தி செய்த படிவங்களை பெற அவகாசம் வழங்கப்படும். அதன்பிறகு அவகாசம் நீட்டிக்கப்படாது.

ஒரே தொகுதிக்குள் இருந்தால் படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து கொடுக்கலாம். வேறு தொகுதியில் குடியேறி இருந்தால், அவர்கள் முகவரி மாற்றுவதற்காக படிவம் 8-ஐ தான் கொடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

சென்னையில் 40.8 சதவீதம் முடிந்த SIR பணிகள்-விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு!

சென்னையில் 40.8 சதவீதம் SIR பணிகள் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது . இது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது .
சென்னையில், 2026 ஆம் ஆண்டுக்கான சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் (SIR) ஒரு பகுதியாக, வாக்காளர் பட்டியல்களைப் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை, மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் 40.8% பேருக்கு, அதாவது 16,35,596 வாக்காளர்களுக்கு, சிறப்பு தீவிர திருத்தப் படிவங்கள் (SIR forms) வீடு வீடாகச் சென்று விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த விநியோகப் பணி நவம்பர் 4, 2025 அன்று தொடங்கி, டிசம்பர் 4, 2025 வரை தொடரும். இந்தப் பணியை மேற்கொள்ள, சென்னை மாவட்டத்தில் மொத்தம் 3,718 பூத் லெவல் அதிகாரிகள் ( Booth Level Officers ) நியமிக்கப்பட்டுள்ளனர்.

16 சட்டமன்றத் தொகுதி
சென்னை மாவட்டத்தின் 16 சட்டமன்றத் தொகுதிகளில் இந்த சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை மாலை 8 மணி நிலவரப்படி, மொத்தம் 40,04,694 வாக்காளர்களில் 16,35,596 பேருக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது மொத்த வாக்காளர்களில் 40.8% ஆகும். அதிகபட்சமாக டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் 2,35,272 வாக்காளர்களில் 1,58,856 பேருக்கு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக திரு. வி. க. நகர் தொகுதியில் 2,23,571 வாக்காளர்களில் 77,227 பேருக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் இந்தப் புதுப்பிப்புப் பணியில் பங்கேற்க ஊக்குவிப்பதற்காக, நவம்பர் 10, 2025 அன்று பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. குடியிருப்புப் பகுதிகள், பூங்காக்கள் மற்றும் பள்ளிகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. வாக்காளர் சேர்க்கை குறித்த செய்திகளைத் தாங்கிய ரங்கோலி கோலங்களும் போடப்பட்டன. இந்தத் தகவல்களை GCC தெரிவித்துள்ளது.
பூத் லெவல் அதிகாரிகள் (Booth Level Officers) என்பவர்கள் யார்?
இவர்கள் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்படும் அதிகாரிகள். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு அதிகாரி இருப்பார். வாக்காளர் பட்டியலைத் தயார் செய்வது, புதுப்பிப்பது, வாக்காளர்களின் விவரங்களைச் சரிபார்ப்பது போன்ற பணிகளை இவர்கள் மேற்கொள்வார்கள். வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்து, அவர்களின் விவரங்களைச் சேகரிப்பார்கள்.
சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்றால் என்ன?
இது வாக்காளர் பட்டியலை மிகவும் துல்லியமாகவும், முழுமையாகவும் மாற்றுவதற்காக நடத்தப்படும் ஒரு சிறப்புப் பணியாகும். புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது, இறந்தவர்களின் பெயர்களை நீக்குவது, முகவரி மாறியவர்களின் விவரங்களைப் புதுப்பிப்பது போன்ற பணிகள் இதில் அடங்கும். இது பொதுவாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் விரைவாகச் செய்யப்படும்.
இந்த SIR படிவங்கள் எதற்காக?
வாக்காளர்கள் தங்கள் பெயர், முகவரி, வயது போன்ற விவரங்கள் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும், ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அதைத் தெரிவிக்கவும் இந்தப் படிவங்கள் உதவுகின்றன. புதிய வாக்காளர்கள் இந்தப் படிவத்தைப் பயன்படுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்யலாம்.
தேர்தல்களுக்கு மிகவும் அவசியமானது
இந்தச் சிறப்புத் திருத்தப் பணி, 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தல்களுக்கு மிகவும் அவசியமானது. துல்லியமான வாக்காளர் பட்டியல் இருந்தால் மட்டுமே தேர்தல்கள் நேர்மையாகவும், திறமையாகவும் நடத்தப்படும். எனவே, வாக்காளர்கள் அனைவரும் இந்தப் பணியில் முழு ஒத்துழைப்பு அளித்து, தங்கள் விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Read More