rajmohan

educationதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்மாவட்டம்

பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 94.31% பேர் தேர்ச்சி

தமிழக பள்​ளிக் ​கல்வி பாடத் திட்​டத்​தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு (மார்ச் 2026) கடந்த மார்ச் 11-ம் தேதி தொடங்​கி கடந்த ஏப்​.6-ம் தேதி நிறைவடைந்தது. சுமார் 8.82 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். தொடர்ந்து விடைத்தாள் திருத்த பணிகள் தொடங்கி நிறைவடைந்தது. இந்நிலையில், இன்று சென்னை – அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.

மொத்தம் 8.82 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதியதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். இதில் 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
வழக்கம்போலவே இந்த முறையும் தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே முன்னிலை வகிக்கின்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 92.15 சதவீதம், மாணவிகளின் எண்ணிக்கை 96.47 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மாணவர்களை விட 4.32 சதவீதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதத்தை பொறுத்தவரையில் புதுக்கோட்டை (97.57%), சிவகங்கை (97.54%), தஞ்சாவூர் (97.41%), திருச்சி (97.31%), கன்னியாகுமரி (97.30%) மாவட்டங்கள் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.

அரசு பள்ளிகளின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.66 சதவீதம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

பாட வாரியாக தேர்ச்சி விகிதம்:

தமிழ் – 98.43%, ஆங்கிலம் 99.44%, கணிதம் 97.36%, அறிவியல் 98%, சமூக அறிவியல் 97.93%.

நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்கள்:

தமிழ் – 34 , ஆங்கிலம் – 93, கணிதம் 3194, அறிவியல் – 10476, சமூக அறிவியல் – 3336 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.66%

Read More
TVKஅரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

பிஎம்ஸ்ரீ திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் என்று தெரிவித்தார்.

தலைமைச் செயலத்தில் அமைச்சர் ராஜ்மோகனிடம் ‘தமிழகத்தில் பிஎம்ஸ்ரீ திட்டம் ஏற்கப்படுமா?’ என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “இரு மொழிக் கொள்கைதான் நமது அடிப்படையான கொள்கை. உறவுகளுடன் பேச தமிழ் மொழி, உலகுடன் பேச ஆங்கில மொழி என்பதே எங்கள் கொள்கை. பிஎம்ஸ்ரீ திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.
மத்​திய அரசின் தேசிய கல்விக் கொள்​கை​யில் பிஎம்​ஸ்ரீ பள்​ளித் திட்​டம் இடம்​பெற்​றுள்​ளது. இதன்​மூலம் பள்​ளி​களின் கட்​டமைப்பு வசதி​கள் மேம்​படுத்தப்பட்டு வரு​கின்​றன. ஆனால், இந்த திட்​டத்​தில் மும்​மொழிக் கொள்கை இருப்​ப​தால் தமிழகம் இணைய மறுத்​து​விட்​டது. இதன் காரண​மாக, ஒருங்​கிணைந்த பள்​ளிக் ​கல்​வித் திட்​டம் மூல​மாக தமிழகத்​துக்கு தரவேண்​டிய சுமார் ரூ.3,500 கோடியை வழங்​காமல் மத்​திய அரசு நிறுத்தி வைத்​தது.

இந்த விவ​காரம் கடந்த திமுக ஆட்​சி​யில் பெரும் சர்ச்​சை​யானது. இதன் தொடர்ச்சியாக, மத்​திய கல்வி அமைச்​சகம் சமீபத்தில் தமிழக அரசுக்கு மீண்​டும் ஒரு கடிதம் எழு​தி​யுள்​ளது. பிஎம்ஸ்ரீ பள்​ளித் திட்​டத்​தின்​கீழ் பள்​ளி​களை மேம்​படுத்த உடனடி​யாக ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட வேண்​டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தவெக தலை​மை​யில் புதிய அரசு பதவியேற்ற சூழலில் மத்​திய அரசு இந்தக் கடிதத்தை அனுப்​பியது அரசி​யல் வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

இந்த விவ​காரத்​தில் தவெக என்ன முடி​வெடுக்​கும், முந்​தைய திமுக அரசு ​போல எதிர்ப்பு தெரிவிக்​குமா அல்​லது ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திடு​மா, நிறுத்தி வைக்​கப்​பட்ட கல்விக்​கான நிதியை மத்​திய அரசிடம் இருந்து பெற என்ன மாதிரி​யான நடவடிக்கை எடுக்​கும் என பல கேள்வி​கள் எழுந்​துள்​ளன. இந்தப் பின்னணியில்தான் “இரு மொழிக் கொள்கைதான் நமது அடிப்படையான கொள்கை. பிஎம்ஸ்ரீ திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்று பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

Read More