rainalert

தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

கனமழை தொடரும்..அடுத்த 3 மணி நேரத்திற்கு…

டிட்வா புயல் வலுவிழந்த போதிலும் சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘டிட்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புக்கான இழப்பீடுகளை விரைந்து வழங்கிட மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வீடுகளின் சேதங்கள், மனித உயிரிழப்புகள், கால்நடை உயிரிழப்புகள் போன்றவற்றிற்கான இழப்பீடுகள் விரைந்து வழங்கிட வேண்டும் எனவும், பல்வேறு மாவட்டங்களில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரவும் அறிவுறுத்தினார்.
அடுத்த 18 மணி நேரத்திற்கு மழை தொடரும் – வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த்!
சென்னையில் அடுத்த 12 முதல் 18 மணி நேரத்திற்கு மழை தொடரும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கனமழை வாய்ப்பு.

ஸ்ரீஹரிகோட்டா – மகாபலிபுரம் கடற்கரை பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேர மழை எச்சரிக்கை.. வானிலை மையம்

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேர மழை எச்சரிக்கை.. வானிலை மையம் வார்னிங்!
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழை, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

சென்னையில் சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் (காலை 10 மணி வரை) அடுத்த 3 மணி நேர மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் மழைக்கு வாய்ப்புள்ளது.
அதேபோல் புதுச்சேரியில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், கோயம்பேடு, வடபழனி, வள்ளுவர் கோட்டம், எழும்பூர், சாலிகிராமம், கோடம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட இடங்களில் நேற்றிரவு மழை பெய்தது. புறநகர் பகுதியான தாம்பரம், வண்டலூர், சேலையூர், முடிச்சூரில் மழை வெளுத்து வாங்கியது.
தேனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பொழிந்தது. அல்லிநகரம், அன்னஞ்சி, அரண்மனைப்புதூர், குன்னூர் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான பேரூர், மாதம்பட்டி, ஆலந்துறை
சிறுவாணி உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்தது.
மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, தென்காசி மாவட்டம் குற்றால பிரதான அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காலையில் எப்படி காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதோ, அதே போல இரவு நேரத்திலும் காணமுடிந்தது. பெரம்பலூர் மாநகரில் தீரன் நகர், கவுல்பாளையம், வேப்பந்தட்டை, பாடாலூர், குன்னம், ஆலத்தூரில் மழை பெய்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, மதுக்கூர், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, திருவையாறு, பாபநாசம் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழை மண்ணை குளிர்வித்தது.
இந்நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More