Punjab

IPL 2025தமிழ்நாடுவிளையாட்டு

4 ஆவது முறையாக சி.எஸ்.கே. தோல்வி.. 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப் கிங்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இது சென்னை அணி எதிர்கொள்ளும் தொடர்ச்சியான 4ஆவது தோல்வியாகும்.
சண்டிகர் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்துள்ள பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் பிரியன்ஷ் ஆர்யா 42 பந்துகளில் 9 சிக்சர் 7 பவுண்டரியுடன் 103 ரன்கள் எடுத்தார்.

சஷாங்க் சிங் 52 ரன்களும், மார்க்கோ யான்சன் 34 ரன்களும் அதிரடியாக சேர்த்தனர். 8 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 219 ரன்கள் குவித்து பிரமிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி சென்னை அணி களம் இறங்கியது.
ஓபனிங் பேட்ஸ்மேன்கள் டெவோன் கான்வே, ரச்சின் ரவிந்திரா அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு சென்னை அணி 61 ரன்கள் சேர்த்தது.

ரச்சின் 36 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் ருதுராஜ் 1 ரன்னில் வெளியேறினார். பின்னர் இணைந்த ஷிவம் துபே டெவோன் கான்வே இணை அதிரடியாக விளையாடி ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தது. துபே 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் தோனி களமிறங்கியபோது 49 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்த டெவோன் கான்வே ரிட்டையர்ட் அவுட் என்ற முறையில் வெளியேறினார்.
பெர்கூசன் வீசிய 18 ஆவது ஓவரில் 2 சிக்சர்களை விளாசி தோனி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். கடைசி 2 ஓவர்களில் சென்னை அணி வெற்றி பெற 43 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் வீசிய 19 ஆவது ஓவரில் தோனி 1 சிக்சரும் பவுண்டரியும் விளாச அந்த ஓவரில் 15 ரன்கள் எடுக்கப்பட்டது.

இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவை என்ற நிலையில், யஷ் தாகூர் வீசிய முதல் பந்திலேயே தோனி ஃபைன் லெக் திரையில் இருந்த யுஸ்வேந்திர சாஹலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 12 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 சிக்சர்களுடன் 27 ரன்கள் எடுத்தார்.

Read More
அரசியல்இந்தியா

மதரீதியாக மாவட்டம் பிரிப்பு…கொந்தளித்த யோகி

பஞ்சாப்:மூஸ்லீம்கலள் அதிகம் வசித்த பகுதியை தனி மாவட்டமாக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை. இதை தன் தேர்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் சேர்த்திருந்தது. தற்போது ,காங்கிரஸ் முதல்வரான கேப்டன்

Read More
இந்தியா

அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் – அசத்தும் முதல்வர்!

பஞ்சாப் மாநிலத்தில் அரசு பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என அம்மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் சட்ட பேரவையில் ஒப்புதல் அளித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தின்

Read More