pazhanichamy

அரசியல்தமிழ்நாடு

கூட்டணி அரசு  என்று அமித் ஷா சொல்லவே இல்லை: எடப்பாடி பழனிசாமி

மத்திய அமைச்சர் அமித்ஷா கூட்டணி அரசு என்று கூறவே இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் திமுக கூட்டணியை வீழ்த்தும் நோக்கில், அதிமுக – பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கடந்த மாதம் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வந்த நிலையில், கடந்த ஏப்.10-ம் தேதி சென்னை வந்த அமித்ஷா, 11-ம் தேதி ஆடிட்டர் குருமூர்த்தியுடனான சந்திப்புக்குப்பின், மாலை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோருடன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது மத்திய அமைச்சர் அமித்ஷா, ‘‘சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான வாக்குகளை பெற்று ஆட்சியமைக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. பாஜகவும், அதிமுகவும் இணைந்து தான் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியமைக்கப் போகிறோம். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் தான் கூட்டணி இருக்கும். அமைச்சரவை குறித்து வெற்றி பெற்ற பிறகு முடிவு செய்யப்படும். எங்களுடன் கூட்டணியில் இணைந்ததற்கு அதிமுக எந்தவித கோரிக்கையும், நிபந்தனையும் விதிக்கவில்லை’’ என்றார்.

Read More