நிதி ஆயோக் கூட்டம் – இன்று டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முதல்முறையாக பங்கேற்கவிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடப்பு நிதியாண்டிற்கான நிதி ஆயோக் நிர்வாகக்குழு கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை 9.30 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி புறப்படுகிறார்.
டெல்லியில் உள்ள பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் இன்று தங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைநகரில் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றும் தமிழ்நாடு கேடரை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.

பின்னர், ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். கூட்டத்தில், கல்வி நிதி உள்ளிட்ட தமிழ்நாட்டிற்கு தேவையான நிலுவையில் இருக்கும் நிதியை விடுவிக்க வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மத்திய – மாநில அரசுகளிடையே நிலவும் பிரச்சனைகள், ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்தும் கருத்துகளை முன்வைத்து பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டத்தின் இடையே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட இந்தியா கூட்டணி முதல்வர்களை சந்தித்து பேச உள்ளார். மேலும் தனது நண்பரும் ஆந்திர பிரதேச முதல்வருமான சந்திர பாபு நாயுடுவையும் சந்திக்க உள்ளார்.
இதையடுத்து, டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சனிக்கிழமை மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவார் என கூறப்பட்டுள்ளது.