நெல்லை ஜாகிர் உசேன் படுகொலை வழக்கு – முக்கிய குற்றவாளியை சுட்டு பிடித்த காவல்துறை
நெல்லையில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் படுகொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர்.
நெல்லை மாநகர் டவுன் பகுதியில் நேற்று முன் தினம் காலையில் தொழுகை முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜிலி நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
வக்ஃபு நிலத்தகராறு காரணமாக தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக கொல்லப்படுவதற்கு முன்பு ஜாகிர் உசேன் பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலை மிரட்டல்கள் குறித்து காவல் நிலையத்தில் ஜாகிர் உசேன் புகார் அளித்த போது, உதவி ஆணையராக இருந்த செந்தில்குமார், ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என ஜாகிர் உசேனின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி உடலை வாங்க மறுத்தனர்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் கைதுசெய்யப்படுவார்கள் என்று உறுதியளித்தார். மேலும் நிலப்பிரச்னை தொடர்பான இந்த கொலை சம்பவத்தில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இதற்கிடையே ஜாகிர் உசேன் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர், கொலை மிரட்டல் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காத நெல்லை நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர். மேலும், தற்போது கோவை நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக உள்ள செந்தில் குமார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் எடுத்துரைத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட குடும்பத்தினர் ஜாகிர் உசேனின் உடலை பெற்றுக்கொண்டனர். ஜாகிர் உசேன் உடலுக்கு அவரது குடும்பத்தினர் சிறப்புத் தொழுகை நடத்தி நல்லடக்கம் செய்தனர்.
Read More