NDA

அரசியல்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

பாஜக, என்.டி.ஏ. அரசை தமிழ்நாடு விரும்புகிறது” – பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி …

என்.டி.ஏ. கூட்டணியின் பிரச்சாரப் பொதுக்கூட்டம் சென்னை அடுத்த மதுராந்தகத்தில் இன்று பிற்பகல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில் என்.டி.ஏ. கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டிடிவி தினகரன், ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது. தற்போது பாஜக, என்.டி.ஏ. அரசை தமிழ்நாடு விரும்புகிறது. தமிழ்நாட்டை பாதுகாப்பான, ஊழலற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். திமுகவின் முடிவுக்காலத்திற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது.
திமுகவுக்கு இரண்டு முறை மக்கள் வாய்ப்பளித்தார்கள். ஆனால், அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டனர். அவர்கள் இதுவரை ஒன்றுமே செய்யவில்லை. ஊழல், குண்டாஸ், குற்றம் ஆகியவற்றின் அரசு இங்கு இருக்கிறது. அதனை வேரடி மண்ணோடு கிள்ளி எறிய மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
தமிழ்நாட்டில் பாஜக, என்.டி.ஏ.வின் இரட்டை இன்ஜின் அரசு அமைவது உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் ஜனநாயகம், நம்பகத்தன்மை உள்ளிட்டவை இல்லாத அரசுதான் இருக்கிறது. அரசு இங்கு ஒரே குடும்பத்திற்காக இயங்கிவருகிறது.
வம்சாவழி, ஊழல், பெண்களை வசைபாடுவது, கலாச்சாரத்தை வசைபாடுவது உள்ளிட்ட நான்கு வழிகள்தான் திமுகவில் இருப்பவர்கள் வளர்ச்சி பெற இருக்கிறது. இது தமிழ்நாட்டு மக்கள் சுமக்க வேண்டியதாக இருக்கிறது.
நாட்டின் பண்பாட்டை வளம் நிறைத்ததாக மாற்றியது தமிழ்நாடு. வளர்ச்சி அடைந்த பாரதம் என நாடு முன்னேறிக்கொண்டிருக்கும் வேளையில், தமிழ்நாட்டை திமுகவிடம் இருந்து விடுவிக்க வேண்டும். தமிழ்நாடு வளரும் வேகத்தில் பாரதம் வளரும்.
கடந்த 11 ஆண்டுகளாக மத்திய அரசு தமிழ்நாடு வளர்ச்சிக்காக வரலாறு காணாத பணிகளை செய்துள்ளது. 2014ஆம் ஆண்டுக்கு முன்பாக திமுக – காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாடுக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், கடந்த 11 ஆண்டுகளில் அதிகாரப்பகிர்வு வாரியாக மட்டும் 3 லட்சம் கோடி ரூபாயை தமிழ்நாடுக்கு வழங்கியிருக்கிறது.
திமுக – காங்கிரஸ் அரசு இரயில்வே பட்ஜெட்டில் அளித்த தொகையைவிட என்.டி.ஏ. அரசு 7 மடங்கு அதிக நிதியை வழங்கிவருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் போன்ற ரயில்களை என்.டி.ஏ. அரசுதான் செயல்படுத்தியுள்ளது. மத்திய அரசு விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் ஒவ்வொரு நிலையிலும் உறுதுணையாக இருந்து வருகிறது.
தமிழ், கலாச்சாரம், வரலாற்றுப் பங்களிப்பு ஆகியவை எல்லாம் எப்போதும் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு உலக தலைவர்களுக்கு திருக்குறள் நூலை பரிசாக வழங்கியிருக்கிறேன். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதி பெயரில் இருக்கை அமைத்துள்ளோம். காசியிலே பல பிள்ளைகள் தமிழில் பேசுவது மகிழ்ச்சியை தருகிறது.
தமிழ் கலாச்சாரத்தை பாதுகாக்க உறுதியோடு பணியாற்றிவருகிறோம். சில நாட்களுக்கு முன்பு நமது முருகருக்கு விளக்கு போடுவதில் விவாதம் ஏற்படும்போது, நமது தலைவர்கள் எல்லாம், பக்தர்களின் உரிமைக்கு குரல் கொடுத்தனர். அவர்களுக்கு பாராட்டு. திமுக – காங்கிரஸ் அரசு ஜல்லிக்கட்டை தடை செய்தது. உங்களை அவமானப்படுத்தினர். என்.டி.ஏ. அரசு ஜல்லிக்கட்டுக்கு சட்ட ரீதியாக ஆய்வு செய்து அங்கீகாரம் கொடுத்தது. தமிழ்நாட்டில் இருக்கும் இளைஞர்கள் மீது நம்பிக்கை வைக்கும் அரசு இருக்க வேண்டும். அந்த அரசு மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் அரசாக இருக்க வேண்டும்” என பேசினார்.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

தேர்தல் NDA பிரச்சாரம்-மோடி தமிழகம் வருகை…

தமிழகத்திற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். ஈபிஎஸ், அன்புமணி, ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்
பிரதமரின் வருகையை ஒட்டி செங்கல்பட்டு ஜி.எஸ்.டி. சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்து ஆட்சியர் சினேகா உத்தரவிட்டுள்ளார். ஜி.எஸ்.டி. சாலையில் நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல ஆட்சியர் சினேகா அறிவுறுத்தியுள்ளார். ஜி.எஸ்.டி. சாலையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மட்டும் வழக்கம்போல் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் இன்று மோடி தலைமையில் பா.ஜ.க பொதுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இதில் மோடியுடன் எந்தெந்த கட்சிகள் மேடையை பகிர்ந்து கொள்ள உள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக ஆளும் கட்சியான தி.மு.க முதல் தற்போது தொடங்கப்பட்டுள்ள த.வெ.க வரை தீவிரமான களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இன்று பிரச்சாரம் செய்கிறார். முதலில் திருவனந்தபுரத்திற்கு செல்லும் மோடி வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மூன்று புதிய ‘அம்ரித் பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்
தொடர்ந்து, அங்கு பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்ட பின்னர் சென்னை செங்கல்பட்டில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியான அ.தி.மு.க உட்பட ஆறு கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் மோடியுடன் மேடையை பகிர்ந்து கொள்வார்கள் என்று பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்த அணியான டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது. தமிழ்நாடு பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல் தலைமையில் டிடிவி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியுடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு பியூஷ் கோயல் மற்ற கூட்டணி கட்சிகளான 4 கட்சிகளின் தலைவர்களை சந்தித்தார்.

அதன்படி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஏ.சி. சண்முகம், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜகன் மூர்த்தி மற்றும் வாசன் ஆகியோரை சந்தித்தார். தொடர்ந்து, பா.ஜ.க-வுக்கு ஆலோசனை வழங்கும் ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர் எஸ். குருமூர்த்தியையும், பட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாசையும் கோயல் சந்தித்தார்.

இந்த சந்திப்பிற்கு பிறகு பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமி மற்றும் வாசன் ஆகியோருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்த அவர் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலும், மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் நல்லாட்சி, வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இது, “இரட்டை இயந்திர வளர்ச்சி” என்ற பா.ஜ.க-வின் பரந்த தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும் என்று அவர் தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று நடைபெறும் பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய நீதிக் கட்சி, புரட்சி பாரதம் கட்சி, பா.ம.க, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் பிரதமர் மோடியுடன் மேடையை பகிந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More