போக்குவரத்து மாற்றம் – சென்னையில் காணும் பொங்கல்…
காணும் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், இதனையொட்டி சுற்றுலா தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகை மற்றும் மாட்டுப் பொங்கலைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் இன்று காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலா தலங்கள், கடற்கரை, பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு செல்வர்.
இதற்காக மக்கள் கூடும் பகுதிகளில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More