jailer2

சினிமாதமிழ்நாடு

முத்துவேல் பாண்டியன் வேட்டை ஆரம்பம்.. மரண மாஸ் போஸ்டருடன் வெளியான ‘ஜெயிலர் 2’ அப்டேட்!

ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் இப்படம் குறித்து தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகும் ‘ஜெயிலர் 2’ படத்தின் ஷுட்டிங் துவங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றது ‘ஜெயிலர்’. இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக நீண்ட காலமாகவே கூறப்பட்டு வந்தது. இதனையடுத்து சமீபத்தில் மிரட்டலான அறிமுக வீடியோ வெளியாகி வேறலெவல் வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் ‘ஜெயிலர் 2’ குறித்தான வேறலெவல் அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ வெளியாகி வேறலெவல் வரவேற்பினை பெற்றது. ரஜினி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரப் என பல மொழிகளை சார்ந்த பிரபலங்கள் மற்றும் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா, வசந்த் ரவி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருந்தனர்.
ரஜினியின் மாஸ் ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியான ‘ஜெயிலர்’ உலக அளவில் பெரும் வரவேற்பினை பெற்றது. பாக்ஸ் ஆபீஸில் ரூ. 600 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில் ‘ஜெயிலர்’ இரண்டாம் பாகம் குறித்து கடந்த பொங்கல் தினத்தன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. நெல்சன் திலீப்குமாரின் வித்தியாசமான மேக்கிங்கில், ரஜினியின் மாஸ் சீன்களுடன் மிரட்டலான ‘ஜெயிலர் 2’ ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டது.
இந்நிலையில் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள போஸ்டரில் ‘முத்துவேல் பாண்டியன் வேட்டை ஆரம்பம் என குறிப்பிட்டு, படப்பிடிப்பு துவங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரஜினி ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
ரஜினி தற்போது ‘கூலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பல மொழிகளை சார்ந்த பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் ரூ. 1000 கோடி வசூலிக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. இதனால் ‘கூலி’ மீது உச்சக்கட்ட்ட்ட எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Read More