communist

அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

இழுபறிக்கு பின் முடிவான தொகுதி பங்கீடு… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள்..

தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக 2026 ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுச் செயலாளர் பெ.சண்முகம் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து இன்று திமுகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கலந்து பேசினார். இதனடிப்படையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாட்டில் 5 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலக்குழுச் செயலாளர், ” கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதே எங்களது விருப்பமாக இருந்தது. எனினும், கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் நாங்கள் கேட்ட இடங்கள் கிடைக்கவில்லை. இந்த எண்ணிக்கை எங்களுக்கு முழுத் திருப்தியை அளிக்கவில்லை என்றாலும், கூட்டணியின் ஒற்றுமை சிதைந்துவிடக்கூடாது என்பதிலும், அதற்கு நாங்கள் காரணமாகிவிடக் கூடாது என்ற அக்கறையிலுமே இந்த முடிவிற்கு உடன்பட்டதாக தெரிவித்தார்.கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்ட நிலையில், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் கூட்டணியில் இணைந்துள்ள புதிய கட்சிகளைக் கருத்தில் கொண்டு, இந்த முறை 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். திமுக தலைமையிலான கூட்டணியில் மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடும் அடுத்த சில நாட்களில் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More