Coimbatore

தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

கோயம்புத்தூர் மக்களின் 15 வருட கனவு – இன்று செம்மொழி பூங்கா இன்று திறப்பு!

கோவை செம்மொழி பூங்கா இன்று (நவம்பர் 25) திறக்கப்படுகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த பிரம்மாண்டமான பூங்காவை திறந்து வைக்கிறார். இது சுமார் 208.6 கோடி ரூபாய் செலவில், காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறைச்சாலை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

கோவையின் புதிய அடையாளம்
இந்த பூங்கா, முதல்வர் ஸ்டாலினின் தந்தையும், முன்னாள் முதல்வருமான கலைஞரின் கனவை நிறைவேற்றும் ஒரு திட்டமாகும். 2010 ஆம் ஆண்டிலேயே அவர் இந்த பூங்கா திட்டத்தை அறிவித்தார். இப்போது, கோயம்புத்தூர் நகருக்கு ஒரு புதிய அடையாளமாகவும், மக்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் வந்து மகிழ்ந்து செல்ல ஒரு சிறந்த இடமாகவும் இது அமையும்.
தாவரவியல் பூங்கா
45 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த செம்மொழி பூங்காவின் முக்கிய அம்சம் அதன் தாவரவியல் பூங்கா ஆகும். இங்கு 23 விதமான சிறப்புத் தோட்டங்கள் உள்ளன. பாறைத் தோட்டம், மலர்த் தோட்டம், நறுமணத் தோட்டம், மூங்கில் தோட்டம், நீர் தோட்டம், மூலிகைத் தோட்டம், மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளுக்கான தோட்டம் என பலவகையான தோட்டங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
5 லட்சத்திற்கும் அதிகமான செடிகள்
இந்த தாவரவியல் பூங்காவில் 2,000-க்கும் மேற்பட்ட தாவர வகைகளைச் சேர்ந்த ஐந்து லட்சத்திற்கும் அதிகமான செடிகள் உள்ளன. இவற்றில், அழிந்து வரும் நிலையில் உள்ள, சிவப்புப் பட்டியலில் உள்ள, மற்றும் மிக அபாயகரமான நிலையில் உள்ள தாவர வகைகளும் அடங்கும். உதாரணமாக, ஹில்டெகார்டியா பாப்புலிஃபோலியா, பென்டிக்டியா கொண்டப்பன்னா, பிஷோபியா ஜாவானிகா, மற்றும் சிஜியம் ஆக்ஸிடேண்டேல் போன்ற அரிய வகை தாவரங்களையும் இங்கு காணலாம்.
இணையவழி சாதனங்கள்
இந்த பூங்காவின் வடிவமைப்பாளரான ரூபமதி ஆனந்த் கூறுகையில், இங்குள்ள மண்ணின் ஈரப்பதம், வெப்பநிலை மற்றும் ஊட்டச்சத்துக்களை கண்காணிக்க இணையவழி சாதனங்கள் (IoT-based devices) பொருத்தப்பட்டுள்ளன. “மண்ணின் வளத்தை அறியவும், உரமிடுவதை மேம்படுத்தவும் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் கண்காணிக்கப்படுகின்றன. இந்த கண்காணிப்பு, குறிப்பாக ரோஜா தோட்டம் போன்ற மிகவும் கவனமாகப் பராமரிக்க வேண்டிய தோட்டங்களில் மட்டுமே செய்யப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.
பூங்காவில் சேர்க்கப்படும்
இந்த பூங்காவின் ஒட்டுமொத்த வடிவமைப்பு ஆறு முக்கிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என்றும் அவர் கூறினார். அவை: பாதுகாப்பு, மீட்டெடுத்தல், கல்வி, பொழுதுபோக்கு, நல்வாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு. மேலும், பூங்காவின் இரண்டாம் கட்டமாக, இன்னும் அதிக பசுமையான இடங்களையும், சுவாசிப்பதற்கான இடங்களையும் உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். “அடுத்த கட்டத்தில், ஆர்க்கிட் மலர்கள், ஈரநிலத் தோட்டம், புதர் நிலத் தோட்டம், தேவதை கதைகள் தோட்டம் மற்றும் ஊட்டச்சத்து தோட்டம் போன்றவையும் பூங்காவில் சேர்க்கப்படும்” என்றும் அவர் கூறினார்.
டிக்கெட் கவுண்டர்
கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் எம். சிவகுரு பிரபாகரன், எதிர்காலத்தில் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக, செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான விளையாட்டு மையம் மற்றும் 12D திரையரங்கம் போன்றவற்றை செம்மொழி பூங்காவில் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். “VOC மிருகக்காட்சி சாலைக்கு எதிரே உள்ள அரசு அருங்காட்சியகம், இந்த பூங்காவில் உள்ள டிக்கெட் கவுண்டர் கட்டிடத்திற்கு மாற்றப்படும்” என்றும் அவர் கூறினார்.

Read More
இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

கோவைக்கு இன்று வரும் பிரதமர் மோடியை சந்திக்கும் ஈபிஎஸ்… கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை?

கோவைக்கு வரும் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவருடன் ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் இருவரின் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஓராண்டுக்கு முன்பாகவே அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானது. உள்துறை அமைச்சர் அமித் ஷா இதற்காக கடந்த ஏப்ரல் மாதமே சென்னை வந்து, கூட்டணி அறிவிப்பை வெளியிட்டார். அப்போதே, அதிமுக உள்கட்சி விவகாரங்களில் தாங்கள் தலையிடப் போவதில்லை என தெரிவித்தார் அமித் ஷா.
அமித் ஷாவின் இந்த கருத்து, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களும், அந்த சமயத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தவர்களுமான ஓபிஎஸ், தினகரன் ஆகியோரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியதாக அரசியல் விமர்சகர்கள் கருதினர். அதற்கேற்றாற் போல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வெளியேறினர். பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் எனக் கூறிவந்த அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையனையும், கட்சியிலிருந்து ஈபிஎஸ் நீக்கினார்.
இப்படி அதிமுகவை சுற்றி அடுத்தடுத்த நிகழ்வுகள் நடைபெற்று வரும் சூழலில்தான், தமிழ்நாட்டுக்கு வருகை தரும் பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க இன்று 1.30 மணிக்கு வருகை தரும் பிரதமர் மோடியை, கோவை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி வரவேற்க இருக்கிறார். தொடர்ந்து அவரை சந்தித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாஜக மூத்த தலைவர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் பிரதமரை வரவேற்க உள்ளனர். நிகழ்ச்சி முடிந்தபிறகு, மாலை 3.30 மணிக்கு கோவை விமான நிலையத்தை அடையும் மோடி, அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அதற்கு முன்னதாக, கோவையில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்

தென்னிந்தியாவிலேயே நீளமான உயர்மட்ட பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டுள்ள தென்னிந்தியாவிலேயே நீளமான உயர் மட்ட பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கவுள்ளார்.
கோவை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கவுள்ளார். காலை 9.45 மணிக்கு உலக புத்தொழில் மாநாடு 2025-ஐ முதலமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளார். அதன் பின்னர் 11 மணிக்கு கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டுள்ள பாலத்தை திறந்து வைக்கவுள்ளார். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக சுமார் 1,791 கோடி ரூபாயில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
ஜி.டி.நாயுடுவின் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த பாலத்தில் 304 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 10 வழித்தடங்களுடன், தென்னிந்தியாவிலேயே மிக நீளமான உயர் மட்ட பாலமாக இது அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்லும்போது அதிர்வு மற்றும் சத்தம் கேட்பதை தவிர்க்க, புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மூலம் கோவை நகரில் இருந்து விமான நிலையம் செல்லும் நேரம் 45 நிமிடங்களில் இருந்து 10 நிமிடங்களாக குறையும். 12 மணிக்கு சிட்கோ தொழிற்பேட்டை அருகே 126 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள தங்க நகை தொழில் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.

Read More
Covid19அரசியல்தமிழ்நாடு

ட்விட்டரில் ட்ரெண்டாகிய Gobackstalin…ஏன்..?

இன்று கோவைக்கு செல்லும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவைக்கு வர வேண்டாம் எனக்கூறி #Gobackstalin என டுவிட்டரில் டிரெண்டாக்கியுள்ளனர். தமிழகத்திற்கு பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ

Read More
தமிழ்நாடு

அனைத்து அரசு கட்டுமானங்களும் கறாரான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் – கமல் ஆவேசம்!

அனைத்து அரசு கட்டுமானங்களும் கறாரான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். இதை பற்றி அவரின் அறிக்கையில்; கோவை

Read More