cbi

அரசியல்தமிழ்நாடுமாவட்டம்

கரூர் நெரிசல் வழக்கு: டெல்லியில் செந்தில் பாலாஜியிடம் சிபிஐ 6 மணி நேரம் விசாரணை…

கரூர் நெரிசலில் உயி​ரிழப்​பு​கள் தொடர்​பான வழக்​கில், டெல்​லி​யில் செந்​தில் பாலாஜி​யிடம் சிபிஐ அதி​காரி​கள் சுமார் 6 மணி நேரம் நேற்று தீவிர விசா​ரணை நடத்​தினர்.

கடந்த ஆண்டு செப்​.27-ம் தேதி கரூரில் நடை​பெற்ற தமிழக வெற்​றிக் கழகத்​தின் பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசல் ஏற்​பட்டு 41 பேர் உயி​ரிழந்​தனர். தமிழகத்​தையே உலுக்​கிய இந்​தச் சம்​பவம் குறித்து சிபிஐ விசா​ரணை மேற்​கொண்டு வரு​கிறது.இந்த வழக்​கில் ஏற்​கெனவே தவெக தலை​வர் விஜய் 3 முறை டெல்​லி​யில் சிபிஐ தலைமை அலு​வல​கத்​தில் ஆஜராகி விளக்​கம் அளித்​தார். இந்த துயர சம்​பவத்​துக்கு திமுக மற்​றும் செந்​தில் பாலாஜி​யின் ஆதர​வாளர்​களே காரணம் என தவெக தரப்​பில் குற்​றம் சாட்​டப்​பட்டு வரு​கிறது.

மேலும், சம்பவம் நடந்த அன்று இரவே செந்தில் பாலாஜி மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்ததால், அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்தது. இந்​நிலை​யில், மார்ச் 17-ம் தேதி டெல்லி அலு​வல​கத்​தில் ஆஜராகு​மாறு செந்​தில் பாலாஜிக்கு சிபிஐ சம்​மன் அனுப்பியது.அதன்படி செந்​தில் பாலாஜி நேற்று முன்​தினம் சென்​னை​யில் இருந்து டெல்லி சென்​றார். நேற்று காலை 11 மணிக்​குத் தொடங்​கிய விசா​ரணை​யில், சிபிஐ அதி​காரி​கள் கரூர் சம்​பவம் குறித்து அவரிடம் பல்​வேறு கேள்வி​களை எழுப்​பினர். அப்​போது, விஜய் மற்​றும் தவெக நிர்​வாகி​கள் மீதே குற்​றச்​சாட்டை முன்​வைத்து செந்​தில் பாலாஜி பதில்​களை அளித்​த​தாகக் கூறப்​படு​கிறது.

சுமார் 6 மணி நேரம் நீடித்த இந்த விசா​ரணை​யின் போது, செந்​தில் பாலாஜி அளித்த விளக்​கங்​கள் அனைத்​தை​யும் சிபிஐ அதி​காரி​கள் வீடியோ​வாக​வும், எழுத்​துப்​பூர்​வ​மாக​வும் பதிவு செய்தனர். மாலை 5 மணி அளவில்​ வி​சா​ரணை நிறைவடைந்​தது.

Read More
அரசியல்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

சி.பி.ஐ விசாரணைக்கு டெல்லி புறப்பட்ட விஜய்-கரூர் சம்பவம் 

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சிபிஐ விசாரித்து வருகிறது. கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டு புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் கடந்த நவம்பர் மாதம் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்திலும் கடந்த மாதம் விசாரணை நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக த.வெ.க தலைவர் விஜயையும் நேரில் அழைத்து விசாரிக்க சி.பி.ஐ முடிவு செய்து அவருக்கு சம்மன் அனுப்பியது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் இன்று (ஜனவரி 12) காலை சுமார் 11 மணியளவில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகவுள்ளார். இதற்காக சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து கார் மூலம் விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்கிருந்து 7 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். இவருடன் த.வெ.க நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் செல்வதாக கூறப்படுகிறது.

விஜய் டெல்லி வருவதையொட்டி அவருடைய ரசிகர்களும், த.வெ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் டெல்லிக்கு செல்ல முடிவு செய்து புறப்பட்டு விட்டனர். இதனால் சிபிஐ அலுவலகம் முன் மற்றும் விஜய் வரு பாதையில் பெரும் திரளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கையாக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் டெல்லி போலீசாரால் செய்யப்பட்டுள்ளன. த.வெ.க. 2-ம் கட்ட தலைவர்களிடம் டெல்லியில் சி.பி.ஐ. 3 நாள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதுபோல விஜய்யிடமும் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.

Read More