“போதைப் பொருள் தடுப்பில் இந்திய அளவில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டுள்ளது” – டி.ஜி.பி. சங்கர் ஜிவால்
“போதைப் பொருள் தடுப்பில் இந்திய அளவில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டுள்ளதாக தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வரும் நிலையில் இதனை கண்டித்து அரசியல் கட்சியின் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர் . இதில் சில கட்சிகள் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் பேசுகையில் :
போதைப் பொருள் விற்பனை செய்தவர்களின் 18 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளோம். சுமார் 2 லட்சம் பேர் போதைப் பொருள் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்றுள்ளனர். அனைத்து கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவுறுத்தி உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பேசுகையில் :
போதைப்பொருள்களை ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த இந்திய அளவில் போதைப்பொருள் ஒழிப்பில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
