ஆன்மீகம்

இன்றைய ராசிபலன்கள் – 11 செப்டம்பர் 2023

மேஷம் : மேஷ ராசிக்காரர்களுக்கு வாரத்தில் தொடக்க நாளான இன்று வெற்றி நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. வேலைகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். சொன்ன வேலையையும் தாண்டி நல்ல பெயர் எடுக்க கடின உழைப்பை போடுவீர்கள். புதிய முடிவுகளை எடுக்கலாம். புதிய முயற்சிகள் வெற்றி தரும் நாள் .

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பலன்கள் உண்டு. புதிய வேலை தேடலாம். வேலை செய்யும் இடத்தில் ப்ரோமோஷன் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களை சுற்றி இருப்பவர்கள், நீங்கள் செய்யும் வேலையை பார்த்து பாராட்டு மழையை பொழிய போகிறார்கள். திறமை வெளிப்படக்கூடிய நாள்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பொறுமை தேவை. நிதானமாக எல்லா வேலையும் செய்யுங்கள்.‌ எதிலும் அவசரப்பட வேண்டாம். முன்கோபம் வேண்டவே வேண்டாம். அடுத்தவர்களை எடுத்துறிந்து பேசினால் ஆப்பு உங்களுக்கு தான் . உங்களுக்கு எது கிடைக்குதோ அதை வைத்து திருப்தி அடைந்து கொள்ளும் நாள் .

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன குழப்பம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு மன நிறைவு இருக்காது. இன்று சின்ன சின்ன பின்னடைவுகள் இருக்கும் அதற்காக வருந்தாதீர்கள் . இன்று நீங்கள் அமைதியாக இருக்கே வேண்டிய நாள் .

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சோகம் நிறைந்த நாள் . வேலையில் கவனம் இருக்காது. ஈடுபாடு இருக்காது. திட்டு வாங்க அதிக வாய்ப்பு உண்டு. மனதை ஒருநிலைப்படுத்தி வேலையில் கவனம் செலுத்துங்கள். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக அமையப் போகின்றது. நீங்கள் செய்யும் வேலையை பார்த்து மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். அதற்கு தகுந்த சன்மானமும் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே சண்டை வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் சரி மா சாரிமா என்றபடி இருந்தால் மனைவிடம் இருந்து எஸ்கேப் ஆவீர்கள் .

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அதிக நன்மைகள் நடக்கக்கூடிய நாள் . வாகனங்களில் செல்லும்போது மட்டும் கவனமாக செல்லவும்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் அது உங்கள் நன்மைக்காக மட்டும் தான். எதை நினைத்தும் கவலைப்பட வேண்டாம் . போனது போகட்டும் என விட்டுவிட்டு அடுத்த வேலையை பார்க்க தொடங்குங்கள் . நல்ல நண்பர்களும் நல்ல உறவுகளும் சொல்லுவதை கேட்டு நடந்தால் முன்னுக்கு வருவீர்கள் .

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனமகிழ்ச்சியான நாளாக இருக்கும் . நீண்ட நாட்களாக பிரிந்து இருந்த ஒருவர் உங்களை சந்திப்பார்கள். நெகிழ்ச்சியான ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பு உள்ளது. இன்ப அதிர்ச்சி அதிகம் இருக்கும் நாள்.

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். சின்ன சின்ன விஷயத்தில் தோல்வி அடைந்தாலும் திரும்பவும் முயற்சி செய்து அதில் வெற்றி அடைந்து விடுவீர்கள். உங்களுடைய திறமையை நீங்களே பார்க்க போகும் நாள் .

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நிறைவான நாளாக அமையப் போகின்றது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தடைப்பட்டு வந்த சுப காரியங்களை மீண்டும் பேச தொடங்கி விடுவீர்கள். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். சந்தோஷத்திற்கு குறையில்லாத நாள்.

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் வரக்கூடிய நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் . வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளவும்.