அரசியல்தமிழ்நாடு

கோடை விடுமுறை முடிந்து பள்ளி செல்லும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்காக ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 29ஆம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில் , கோடை வெப்பத்தின் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.

இதையடுத்து ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.ஆனால் வெயிலின் தாக்கம் குறையாத நிலையில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12-ம் தேதியும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், கோடை விடுமுறை முடிந்து இன்று முதல்நாள் பள்ளிக்குச் செல்லும் மாணவச் செல்வங்களுக்கு என் வாழ்த்துகள்!

நன்கு படியுங்கள், படிப்போடு நில்லாமல் விளையாடுங்கள், உலகைப் புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் சிறகைப் பொருத்திக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற அரசு துணை நிற்கும்! நான் உறுதுணையாக இருப்பேன். என்று பதிவிட்டுள்ளார்.