தமிழ்நாடு

தூத்துக்குடி புத்தக திருவிழா : சிறப்புரையாற்றிய பேச்சாளர்களுக்கு நினைவு பரிசு கொடுத்து கவுரவித்த கனிமொழி எம்பி

தூத்துக்குடி – எட்டயபுரம் சாலை சங்கரப்பேரி பிரிவு சாலை அருகில் உள்ள மைதானத்தில், தூத்துக்குடி மாவட்ட‌ நிர்வாகம் சார்பில் கடந்த 21-ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வரும் 4-வது புத்தக திருவிழாவின் ஆறாவது நாளான இன்று (26/04/2023) புதன்கிழமை, நடைபெற்ற நிகழ்ச்சியில் “கரிசல் நிலமென்னும் நல்லாள்” என்ற தலைப்பில் தென்சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களும், “கவிதையின் மதம்” என்ற தலைப்பில் கவிஞர் தேவநேசன், “வட்டார இலக்கியங்கள்” என்ற தலைப்பில் எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களும் உரையாற்றினார்கள்.

இதில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்பி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மற்றும் பலர் கலந்துகொண்டனர்.