விளையாட்டு

சென்னையில் நாளை நடைபெறும் இந்தியா – ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு இலவச மினிபஸ் வசதி..!

இந்தியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது . இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

இதில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியாவும், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் அசத்தலான வெற்றி பெற்றன. இந்நிலையில் இந்த தொடரை கைப்பற்றப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை (புதன்கிழமை) பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது .

இந்த அனல் பறக்கும் போட்டிக்காக ரசிகர்களுக்கு ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் மளமளவென விற்று தீர்ந்து விட்டன. இந்த நிலையில் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா, ஆஸ்திரேலியா அணி வீரர்கள் நேற்று விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தனர்.

தொடரை வெல்ல இரு அணி வீரர்களும் இன்று தீவரை பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் ஒருநாள் போட்டியை காண வரும்.ரசிகர்களுக்கு இலவச மினி பஸ் வசதி வழக்கப்பட்டுள்ளது .

சென்னையில் உள்ள அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் மைதானம் வரை நாளை காலை 11 மணி முதல் போட்டி முடியும் வரை இலவச மினி பஸ் சேவை வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது .