தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், தூத்துக்குடி – தருவைகுளம் பகுதியில் 70,000 மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார் கனிமொழி எம்பி..!
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்தநாள் மற்றும் மாநகராட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்று ஒரு வருடம் நிறைவுபெற்றதை முன்னிட்டு, இன்று (04/03/2023) சனிக்கிழமை, தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், தூத்துக்குடி – தருவைகுளம் பகுதியில் 70,000 மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார் கனிமொழி எம்பி .
இந்நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
