பிரதமர் மோடியின் தாயார் மறைவு – தலைவர்கள் இரங்கல்
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். கடந்த 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரதமரின் தாயார் ஹீராபென் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
