அரசியல்தமிழ்நாடு

முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கனிமொழி எம்பி தலைமையில் ஆய்வுக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான திருமிகு.கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.எம்.சி.சண்முகையா, திரு.ஜி.வி.மார்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் திரு.செந்தில்ராஜ் மாநகராட்சி மேயர் திரு.ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் திருமிகு.சாரு ஸ்ரீ மற்றும் பலர் கலந்துகொண்டனர்!