ஸ்டெர்லைட் எதிர்ப்பு போரட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்திய கனிமொழி எம்பி..!
உயிர்ச்சூழல் காக்க களமாடி படுகொலையுண்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் “உயிர்ச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம்” தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் உள்ள பெல் ஹோட்டல் கூட்டரங்கில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது.
இதில் கனிமொழி எம்பி கலந்துகொண்டு கருத்துரையாற்றினார். முன்னதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் படுகொலையுண்ட தியாகிகளின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது

இந்நிகழ்ச்சியில், பாராளுமன்ற உறுப்பினரும், விசிக தலைவருமான தொல் திருமாவளவன், மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, SDPI மாநிலத் தலைவர் முபாரக், சூழலியல் பாதுகாவலர் சுந்தர்ராஜன், பச்சை தமிழகம் தலைவர் சுப.உதயகுமரன், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு மேதா பட்கர், கிருஷ்ணமூர்த்தி (எ) கிட்டு மற்றும் பலர் கலந்துகொண்டனர்
