ராஜஸ்தான் VS கொல்கத்தா அணிகள் இன்று மோதல்..!
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இதில் ராஜஸ்தான் அணி 3 வெற்றி, 2 தோல்விகளை பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. நடப்பாண்டில் துவக்க ஆட்டங்களில் மிக அற்புதமாக ஆடிய ராஜஸ்தான், அதே ஆட்டங்களை அடுத்தடுத்த ஆட்டங்களில் ஆடத் தவறியது.
இந்த பக்கம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3 வெற்றி, 3 தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணியை போலவே துவக்க ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை வாரிக் குவித்த கொல்கத்தா, கடைசி ஆட்டங்களில் மிக மோசமாக தோல்வியை தழுவி அதிர்ச்சி அளித்தது.
ஆக மொத்தம் தற்போது இரு அணிகளும் கிட்டத்தட்ட சம பலம், பலகீனங்களை உடையவை என்பதால், இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதில் எந்த வித சந்தேகம் இல்லை .
