விளையாட்டு

முதல் வெற்றியை பதிவு செய்யுமா சென்னை சூப்பர் கிங்ஸ்..? ஐதராபாத் அணியுடன் மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத் அணியுடன் சென்னை அணியும், பெங்களூரு அணியுடன் மும்பை அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன .

இதில் இன்று பிற்பகல் நடக்கும் முதல் போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. DY Patil மைதானத்தில் இந்தியா நேரப்படி சரியாக மனிலு இந்த போட்டி தொடங்குகிறது.

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்தித்த முதல் 3 ஆட்டங்களிலும் வரிசையாக (கொல்கத்தா, லக்னோ, பஞ்சாப்புக்கு ) எதிராக தோல்வியை மட்டுமே சந்தித்து திண்டாடுகிறது.

இந்த பக்கம் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணி முதல் இரு லீக்கில் ராஜஸ்தான், லக்னோ அணிகளிடம் படுதோல்வியடைந்துள்ளது .

இந்த இரு அணிகளும் இதுவரை 16 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 12-ல் சென்னையும், 4-ல் ஐதராபாத்தும் வெற்றி பெற்றுள்ளன.