AK 61 இல் இணையும் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்..!
வலிமை படத்துக்கு பிறகு மீண்டும் ஹெச் வினோத் உடன் கூட்டணி அமைத்துள்ள அஜித் அதற்கான பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். அண்மையில் அஜித் கேரள கோவில் ஒன்றில் எடுத்த புகைப்படங்கள் வைரல் ஆனது.
வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்க பட உள்ள படம் தான் AK61. ஏற்கனவே இந்த படத்தின் இசை அமைப்பாளர் ஜிப்ரான் என்பது உறுதி ஆகி உள்ள நிலையில், இந்த படத்தில் இன்னும் வேறு யார் இணைய போகிறார்கள் என்பதை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
இதற்கிடையில் சுப்ரீம் சுந்தர் இந்த படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் ஆக ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது. இவர் தற்போது மலையாளத்தில் மிகவும் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இந்த படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் வெளிவரும் என தெரிகிறது.
