சினிமா

நார்வே தமிழ் திரைப்பட விருதுகள்..! தலைவி படத்திற்காக சிறந்த நடன இயக்குனராக தேர்வானார் காயத்ரி ரகுராம்..!

1965 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தலைவி படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய்.

1965ல் நடிகையாக இருக்கும் ஜெயலலிதா (கங்கனா), முன்னணி நடிகராக இருக்கும் எம்.ஜி.ராமச்சந்திராவுடன் (அரவிந்த் சாமி) இணைந்து நடிக்கிறார்.

ஒரு கட்டத்தில் அரசியலுக்கு வருகிறார் ஜெயலலிதா இறுதியில் எப்படி அரசியலில் ஜெயித்து தமிழக முதலமைச்சர் ஆனார் என்பதே படத்தின் கதை .

படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரமாக கங்கனா வாழ்ந்து இருக்கிறார் என்றே சொல்லலாம். வெகுளித்தனமாக ஆரம்பிக்கும் இவரின் நடிப்பு, ஈர்ப்பு, பிரிவு, அழுகை, ஏக்கம், துணிச்சல், கம்பீரம் எனப் பளிச்சிடுகிறார்.

விமர்சனம்

ஒரு சில இடங்களில் ரசிக்க வைத்து இருக்கிறார். எம்.ஜி.ஆர்.ஆக நடித்திருக்கும் அரவிந்த் சாமி கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்.

ஜிவி.பிரகாஷின் இசையில் பாடல்கள் கவனம் ஈர்க்கவில்லை என்றாலும், பின்னணி இசையில் ஸ்கோர் செய்து இருக்கிறார். விஷால் விட்டலின் ஒளிப்பதிவு சிறப்பு.

மேலும் இப்படத்தில் தமிழ் திரையுலகில் பிரபல நடன இயக்குனராக வலம் வரும் காயத்ரி ரகுராம் மாஸ்டர் தான் நடன இயக்குனராக ஒப்பந்தமானார்.இவரது இயக்கத்தில் உருவான கங்கனாவின் நடனம் படத்திற்கு வலு சேர்த்தது மட்டுமில்லாமல் பல விருதுகளையும் வாங்கித்தந்துள்ளது.

அந்த வரிசையில் நார்வே தமிழ் திரைப்பட விருதுகள் விழாவில் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் தலைவி படத்திற்காக சிறந்த நடன இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதற்காக நடிகை கங்கானாவும் காயத்ரி ரகுராம் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.