சினிமா

சைலண்டாக லீக் ஆன பிக்பாஸ் OTT தமிழ் போட்டியாளர்களின் பெயர் பாட்டியல்..! தொகுப்பாளர் யாரென்று தெரியுமா..?

இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்திலும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளார்கள் . பதிவாகும் வாக்குகள் கோடிக்கணக்கில் இருப்பது கமல்ஹாசன் ஒவ்வரு சீசனிலும் சொல்லும் புள்ளி விவரங்கள் மூலமாக உறுதியாகிறது.

இந்நிலையில் தற்போது தொலைக்காட்சியில் மட்டுமே வெளியாகும் பிக் பாஸ் ஷோவை ஓடிடிக்கு கொண்டு செல்லும் முயற்சியாக கடந்த வருடம் ஹிந்தியில் பிக் பாஸ் OTT ஒளிபரப்பப்பட்டது. அதை பின்பற்றி இந்த வருடம் தமிழில் பிக் பாஸ் ஓடிடி தொடங்குகிறது.

Bigg Boss 3 Tamil First Promo not About Vote its About Captain

அந்த நிகழ்ச்சியையும் உலகநாயகன் தான் தொகுத்து வழங்க இருக்கிறாராம். இதில் போட்டியாளர்களாக தற்போது வனிதா, ஜூலி மற்றும் அனிதா சம்பத் ஆகியோர் உறுதி ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .

இந்நிலையில் பிக் பாஸ் தமிழ் ஓடிடி மீதான எதிர்பார்ப்பு மென்மேலும் அதிகரித்து கொன்டே இருக்கிறது.