பிரிட்டனில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா..! ஒரே நாளில் 1 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு ..
பிரிட்டனில் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு நேற்று முன் தினம், சுமார் 90 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், பிரிட்டனில் நேற்று ஒரே நாளில், 1 லட்சத்துக்கு 6 ஆயிரத்து 122 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த ஏழு நாட்களில் மட்டும், அங்கு சுமார் 6 லட்சத்து 43 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஒமிக்ரான் வகை கொரோனாவுக்கு பிரிட்டனில் இதுவரை 18 பேர் உயிரிழந்து உள்ளனர். பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அன்றாடம் அதிகரித்து வருவதால், அந்நாட்டின் பல்வேறு நிறுவனங்கள் ஆள் பற்றாக்குறையால் தவித்து வருகின்றன.
