விளையாட்டு

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் தொடர்..! ரோகித் ஷர்மாவுக்கு பதில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார் கே.எல்.ராகுல்…

பல சஞ்சலங்களுக்கு மத்தியில் தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

இதற்குமுன் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ரோகித் ஷர்மா நியமிக்கப்பட்டு இருந்தார். ஆனால் காயம் காரணமாக அவர் டெஸ்ட் தொடரை விட்டு வெளியேறியுள்ள நிலையில் கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பெயர் பட்டியல் :

விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ரஹானே, புஜாரா, ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வால், பிரியங்க் பஞ்சல், ஷ்ரேயஸ் ஐயர், ரவிச்சந்திரன் அஷ்வின், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சாஹா (விக்கெட் கீப்பர்), இஷாந்த் ஷர்மா, பும்ரா, முகமது சிராஜ், தாக்கூர், உமேஷ் யாதவ், முகமது ஷமி மற்றும் ஜெயந்த் யாதவ்.