பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இரண்டாவது முறையாக வெளியேற்றப்பட்டார் அபிஷேக்..!
பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 தற்போது மக்கள் மத்தியில் அதிகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த சீசனில் இதுவரை நாடியா, நமிதா மாரிமுத்து, சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஜக்கி பெர்ரி ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர்.
இந்நிலையில் ஏற்கனவே மக்களால் வெளியேற்றப்பட்டு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்து பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்த அபிஷேக் ராஜா நேற்று மீண்டும் மக்களால் வெளியேற்றப்பட்டுள்ளார்.
அவரது ஆரம்ப நிலையுடன் ஒப்பிடுகையில், அபிஷேக் ராஜாவின் ஆட்டம் அவரது வைல்டு கார்டு நுழைவுக்குப் பிறகு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது, முன்பை விட இந்த முறை சற்று அதிகமாகவே கொளுத்தி போட்டார் . ஆனால் அவரால் இனி நிகழ்ச்சியில் தொடர முடியாது என்பது துரதிர்ஷ்டவசமானது.
