தல என இனி யாரும் என்னை கூப்பிட வேண்டாம்..! ரசிகர்களுக்காக நடிகர் அஜித் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..
அஜித்தின் வலிமை 2022 ஜனவரியில் பொங்கல் பண்டிகைக்காக பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியிட தயாராகி வருகிறது, மேலும் ரசிகர்கள் ஆவலுடன் அந்த நாளுக்காக காத்திருக்கிறார்கள்.
வலிமை படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், எச் வினோத் இயக்கியுள்ளார். ஜீ ஸ்டுடியோஸுடன் இணைந்து பேவியூ ப்ராஜெக்ட்ஸ் எல்எல்பி பேனரின் கீழ் போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் தற்பொழுது அவரது சார்பில் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில் அஜித் தெரிவித்திருப்பதாவது ,தல என்றோ வேறு ஏதேனும் பட்டப்பெயர்களை குறிப்பிட்டோ என்னை இனி அழைக்க வேண்டாம் எனவும் .என்னைப்பற்றி எழுதும்போதோ குறிப்பிடும்போதோ பெயரை குறிப்பிட்டால் போதுமானது.’தல’ வேண்டாம் A.K. என கூப்பிடலாம்.அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு, உள்ளி சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன் என பதிவிட்டு உள்ளார்.
