பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த மாநாடு..! வெற்றி கொண்டாட்டத்தில் குரூப் தேங்க்ஸ் சொன்ன படக்குழு -வைரல் வீடியோ..
தமிழ் சினிமாவின் ரொமான்டிக் நாயகன் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு படம் தமிழ்நாடு முழுவதும் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி முதல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .
டைம் லூப் படம் சுவாரஸ்யமாக இருப்பதால் படம் முழுவதும் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. சிலம்பரசன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர், அதே நேரத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு பிளாக்பஸ்டரை அடிக்க தீவிரமாக உழைத்துள்ளார் என்று நன்றாக தெரிகிறது .

கடந்த 4 நாட்களில் மட்டும் இந்த படம் 30 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மாநாடு படத்தை சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த படத்தை பாராட்டி ரஜினி மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர் .
இந்நிலையில், மாநாடு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை படக்குழுவினர் ஒன்றாக இணைந்து கொண்டாடி உள்ளனர். அப்போது எடுத்த வீடியோவை இயக்குனர் வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்பட அனைவரும் நன்றி என உற்சாகம் ததும்ப கத்தினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
