ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர் மாரீஸ்வரனுக்கு வாழ்த்து தெரிவித்து ஊக்கத்தொகை வழங்கிய கனிமொழி எம்.பி..
நவம்பர் 24 முதல் டிசம்பர் 5 வரை நடைபெறவுள்ள ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் பங்குபெற இந்திய அணிக்காக விளையாடுவதற்கு இந்திய அளவில் 24 வீரர்களில் ஒருவராக ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு சார்ந்த S. மாரீஸ்வரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த ஹாக்கி விளையாட்டு வீரர் மாரீஸ்வரன் . இவரை சென்னையில் இன்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம் பி வாழ்த்து தெரிவித்து ஊக்கத்தொகை வழங்கி ஒடிசா புவனேஸ்வரில் நடைபெறவுள்ள பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்வின் போது ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு தலைவர் சேகர்மனோகரன் மற்றும் துணை செயளாலர்கள் Olympian.திருமாள்வளவன், D.கிளமென்ட் ஆகியோர் உடன் இருந்தனர் .
