அரசியல்தமிழ்நாடு

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து..! மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு…

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்தான நிலையில் அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனையில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்த மதுரை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில், வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்து குறித்த மதுரை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்து என்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது எனவும் மதுரைஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.