இந்தியாவிளையாட்டு

இந்திய விளையாட்டுதுறையில் சிறப்பாய் செயல்பட்ட ஷிகர் தவான் உள்ளிட்ட 35 வீரர், வீராங்கனைகளை அர்ஜூனா விருது..!

இந்திய விளையாட்டுதுறையில் சிறப்பாய் செயல்பட்ட வீரர் வீராங்கனைகளை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் மத்திய அரசால் அர்ஜூனா விருது கொடுக்கப்படும் .

அதேபோல் இந்த ஆண்டும் அர்ஜூனா விருதுக்கு 35 வீரர், வீராங்கனைகளை விருது கமிட்டி தேர்ந்தெடுத்துள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், பாரா பேட்மிண்டன் வீரர் சுஹாஸ் யதிராஜ், பாரா டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா பட்டேல் ஆகியோரும் அடங்குவர்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் 41 ஆண்டுக்கு பிறகு பதக்கம் வென்று சாதனை புரிந்த இந்திய ஆண்கள் ஆக்கி அணியில் இடம்பெற்ற வீரர்களுக்கும் அர்ஜூனா விருது வழங்கப்படுகிறது. அர்ஜூனா விருதுடன் ரூ.15 லட்சம் பரிசுத்தொகையும் கிடைக்கும்.