தமிழ்நாடு

ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் குறைப்பு – தமிழக பள்ளிக்கல்வித்துறை

கொரோனா தொற்று காரணமாக 1 முதல் 12 ம் வகுப்புவரையிலான பள்ளி பாடத்திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை குறைத்துள்ளது

இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் சரிவர இயங்காததால் அனைத்து பாட திட்டங்களையும் நடத்தி முடிக்க முடியாத சூழ்நிலை இருப்பதால் இத்தகைய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனையடுத்து 1 முதல் 12 ம் வகுப்புவரையிலான பள்ளி பாடத்திட்டம் 50 சதவீதம் வரையில் குறைக்கப்பட்டுள்ளது.

1,2 ம் வகுப்புகளுக்கு 50 சதவீதம்

3,4 ம் வகுப்புகளுக்கு 49 சதவீதம்

5 ம் வகுப்பிற்கு 48 சதவீதம்

6 ம் வகுப்பிற்கு 47 சதவீதம்

7,8 ம் வகுப்புகளுக்கு 46 சதவீதம்

9 ம் வகுப்பிற்கு 38 சதவீதம்

10 ம் வகுப்பிற்கு 39 சதவீதம்

11,12 ம் வகுப்புகளுக்கு 35சதவீதம் வரையிலும் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.