கோலாரில் தோண்டி எடுக்கப்பட்ட மொத்த தங்கம் நீரஜ்… கவிஞர் வைரமுத்து டுவிட்…
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று இந்திய தேசிய கொடியை உயர்த்திப் பிடித்த நீரஜ் சோப்ராவுக்கு வீர வாழ்த்து கூறியுள்ளார் கவிஞர் வைரமுத்து.
டொக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஈட்டி எளிதல் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்று 87.58 மீட்டர் தூரத்தில் ஈட்டியை எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை தலைநிமிர செய்த நீரஜ் சோப்ராவை, பிரதமர், குடியரசு தலைவர் உட்பட பலர் பாராட்டி வருகின்றனர்.
தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தனியார் நிறுவனங்கள் சார்பிலும், பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. நீரஜ் சோப்ரா தற்போது பரிசு மழையில் நனைந்து வருகிறார். இந்திய கிரிக்கெட்டு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 1 கோடி ரூபாய் ரொக்க பரிசு, சிஎஸ்கே அணி சார்பில் 1 கோடி ரொக்க பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமான நிறுவனமான இன்டிகோ நிறுவனம் விடுத்த அறிவிப்பில், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா 2021, ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் 2022 ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை இன்டிகோ நிறுவனத்தில் ஓராண்டுக்கு எந்தவித கட்டணமும் இன்றி பயணிக்கலாம் என தெரிவித்துள்ளது. இதுபோல் பல்வேறு நிறுவனங்கள் சார்பில், நீரஜ் சோப்ராவுக்கு பரிசுகளை வழங்கி வருகிறது.
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து, தங்கம் பென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டரில், கோலாரில் தோண்டியெடுக்கப்பட்ட மொத்த தங்கத்திற்கும் மேலானது இந்த ஒற்றை ஒலிம்பிக் தங்கம் இந்திய தேசியக் கொடியை ஒலிம்பிக்கில் உயர்த்தி பிடித்த நீரஜ். உங்களுக்கு எங்கள் வீர வாழ்த்து என தெரிவித்துள்ளார்.
