தமிழ்நாடு

“வேளாண் பட்ஜெட்டுக்கு வரவேற்பு”… முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்த ஈஷா சத்குரு…

திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் தனது முதல் பட்ஜெட்டை ஆகஸ்ட் 13 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளது. வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. வேளாண் பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க அம்சங்கள் இடம் பெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதற்கு, தமிழக விவசாயிகள் வேளாண் அமைப்புகள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தமிழக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்ற அறிவிப்புக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக ஈஷா சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈஷா சார்பில், 10 ஆயிரம் விவசாயிகளுக்கு இயற்கை விவசாய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஈஷாவின் வழிகாட்டுதல்படி, வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் அமைப்பு தேசிய அளவில் பாராட்டைப் பெற்றுள்ளது. மத்திய – மாநில அரசுகளின் விருதுகளும் பெற்றுள்ளது.

இந்த நிலையில், வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்ததற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “வரலாற்று சிறப்புமிக்க வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கும் தமிழக அரசுக்கு பாராட்டுகள். மிக தொன்மையான வேளாண் பாரம்பரியம் கொண்ட, இயற்கை விவசாயத்தில் முன்னோடியான‌ தமிழகம் இதன்மூலம் மகத்தான பொருளாதார, சுற்றுச்சூழல், ஆரோக்கிய பலன்களை நிச்சயம் பெறும். வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.