அரசியல்

“உங்களால்தான் என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு”… சி.வி.சண்முகம் பேச்சுக்கு கே.டி.ராகவன் சுரீர் பதில்…

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசிய நிலையில், அதிமுகவால்தான் பாஜக தோற்றது என்று பாஜகவை சேர்ந்த கே.டி.ராகவன் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக ஆட்சி அமைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தனர் ஆனால் கூட்டணி கணக்கு சரியில்லை என்றும் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோல்வியை சந்தித்தோம் என்றும் கூறினார். பாஜக கூட்டணியால் சிறுபான்மையினரின் ஓட்டுக்களை இழந்ததாகவும் சி.வி.சண்முகம் கூறியிருந்தார்.

சட்டமன்ற தேர்தல் முடிந்து 2 மாதங்கள் ஆன நிலையில், சி.வி.சண்முகம் இவ்வாறு பேசியுள்ளது அதிமுக – பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பாஜகவைச் சேர்ந்த கே.டி.ராகவன், தனது டுவிட்டர் பக்கத்தில், “உங்களால் தான்” என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு… என்று பதிவிட்டுள்ளார்.