அரசியல்தமிழ்நாடு

“உதிர்ந்த முடி ஒன்றுக்கும் உதவாது”… அதிமுகவை விட்டு சென்றவர்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்…

அதிமுகவை விட்டு சென்றவர்கள் எல்லாம் தலையில் இருந்து உதிர்ந்த முடியைப் போன்றவர்கள் என்றும் உதிர்ந்த முடி ஒன்றுக்கும் உதவாது என்று அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக கூறிய சசிகலா அதிமுகவை கைப்பற்றும் வகையில அக்கட்சி நிர்வாகிகளோடு தொலைபேசியில் உரையாடி வருகிறார். அதிமுகவை கைப்பற்றுவேன் என்றும் அம்மா உருவாக்கிய எம்.எல்.ஏ.க்களை கட்சியில் இருந்து நீக்குவது தவறு என்பதை ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ் உணர வேண்டும் என்று உரையாடி வருகிறார்.

அதிமுகவினருடன் சசிகலா தொலைபேசியில் பேசி வரும் நிலையில், அவருக்கு எதிராக அதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றன. சசிகலாவுடன் தொலைபேசியில் பேசுபவர்கள் அக்கட்சியில் இருந்தும் அக்கட்சி தலைமையால் அதிரடியாக நீக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடனான கூட்டம் ஓமலூரில நடைபெற்றது. இதில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் உண்மை தொண்டன் எல்லாம் சொக்க தங்கம் என்றும் கட்சியை விட்டு சென்றவர்கள் எல்லாம் தலையில் இருந்து உதிர்ந்த முடியைப் போன்றவர்கள் என்றும், உதிர்ந்த முடி ஒன்றுக்கும் உதவாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.