இந்தியா

கல்பனா சாவ்லாவைத் தொடர்ந்து சாதனை படைக்க விண்வெளி பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய வம்சாவளி பெண்..!

இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை கல்பனா சாவ்லா பெற்றிருந்தார் .இந்நிலையில் அவரை தொடர்ந்து விண்வெளி பயணம் மேற்கொள்ள இருக்கும் இரண்டாவது இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட ஷிரிஷா பண்டாலா பெற்றுள்ளார்.

Meet Sirisha Bandla, the Second India-Born Woman to Fly to Space

அமெரிக்காவின் விர்ஜின் கேலடிக் விமான நிறுவனத்தின் தலைவரான ரிச்சர்ட் பிரான்சன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு வரும் 11 ஆம் தேதி விண்வெளிப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

Meet Sirisha Bandla, the second Indian woman to travel to space

இந்த குழுவில் ஆந்திர மாநிலம் குண்ட்டூரை பூர்வீகமாகக் கொண்ட ஷிரிஷா பண்டாலாவும் உள்ளார். கல்பானா சாவ்லாவைத் தொடர்ந்து விண்வெளி பயணம் மேற்கொள்ளவுள்ள ஷிரிஷாவுக்கு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.