உலகம்

உடல் எடையைக் குறைக்க புதிய சாதனம்… ஆராய்ச்சியாளர்கள் சாதனை…

உலகளாவிய உடல் பருமன் தொற்றுநோயைக் குறைக்க வாய்ப்பூட்டு சாதனம் ஒன்றை நியூசிலாந்தில் உள்ள ஒடாகோ பல்கலைக்கழக ஆராய்சியாளர்களும், இங்கிலாந்து ஆராய்சியாளர்களும் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

இந்த சாதனம் அணிந்தவரின் மேல் மற்றும் கீழ் தாடையை காந்த சக்தியால் இணைத்து பிடித்துக் கொள்ளும்வகையில் உருவாக்கப்பட்டுள்து. இது ஓரளவுக்கு மேல் வாயை திறக்க முடியாமல் இறுக்க பிடித்துக்கொள்கிறது. 2 மி.மீட்டர் மட்டுமே வாயைத் திறக்க அனுமதிக்கிறது. இதனால் நீராகாரம் தவிர மென்று சாப்பிடக்கூடிய எந்தவொரு உணவு பொருளையும் சாப்பிட முடியாது. திரவ உணவைத் தவிர வேறு எதையும் விழுங்க முடியாது என்பதால், இரண்டு வாரங்களில் உடை எடை 6.36 கிலோ அளவுக்கு குறைந்துவிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

கட்டுப்படுத்த முடியாத உணவு பழக்கம் இரக்கக்கூடியவர்களின் உணவு பழக்கம் மாறுவதுடன், அவர்களின் உடல் எடையும் குறைகிறது என்றும் இதை பொருத்துவதன் மூலம் பேசுவோ, சுவாசிக்கவோ எந்த தடையும் இருக்காது என்றம் ஆராய்ச்சியாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.

இந்த சாதனம், உடல் பருமனுடன் போராடும் மக்களுக்கு பயனுள்ள, பாதுகாப்பான மற்றும் மலிவு கருவியாக இருக்கும்என்று ஒடாகோ துணைவேந்தர் பேராசிரியர் பால் ப்ரூண்டன் கூறுகிறார். மேலும், இது பல் மருத்துவரால் மீண்டும் மீண்டும் பொருத்தப்பட்டு அகற்றப்படலாம் என்றார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குறைந்த கலோரி உணவை கடைப்பிடிக்க அனுமதிக்கிறது என்று பேராசிரியர் பால் ப்ரூண்டன் கூறுகிறார். இந்த சாதனத்தை பார்த்த நெட்டிசன்கள், இது உடல் எடை குறைப்பதற்கான சாதனம் இல்லை என்றும் துன்புறுத்தும் சாதனமாக உள்ளது என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.