இந்தியாகுற்றம்

ஆந்திராவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..! காதல் மனைவியை துண்டுதுண்டாக வெட்டி காட்டுக்குள் எரித்த கொடூர கணவன்..!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புங்கனூர் அடுத்த ராமசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. மென்பொருள் பொறியாளரான இவர், ஹைதராபாதில் பணிபுரிந்து வந்தார். அப்போது ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து 3 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஸ்ரீகாந்த் புவனேஸ்வரி தம்பதியினர் திருப்பதிக்கு குடிபெயர்ந்துள்ளனர் .

திருப்பதி ரூயா அரசு மருத்துவமனையின் பின்புறம் உள்ள வனப்பகுதியில் முழுவதும் எரிந்த நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த திருப்பதி அலிபிரி போலீசார் அங்கு நடத்தப்பட்ட தடயவியல் சோதனையில் எரியாத நிலையில் இருந்த தலை முடியை வைத்து அது பெண் உடல் என அடையாளம் கண்டனர் .

இதையடுத்து சுற்றுப்பகுதியில் காணாமல் போன பெண்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்தனர். இதில், அலிபிரி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் புவனேஸ்வரி கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இதனை வைத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் அனைத்தையும் சோதனை செய்தபோது ஸ்ரீகாந்த் புவனேஸ்வரியை வீட்டில் வைத்து கொலை செய்து சடலத்தை சூட்கேசில் வைத்து ரூயா அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள வனப்பகுதியில் வைத்து பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.மேலும் மனைவி கொரோனவால் இறந்துவிட்டதாகவும் மருத்துவமனையில் உள்ளவர்கள் புவனேஸ்வரியை எரித்துவிட்டதாகவும் உறவினர்களை ஸ்ரீகாந்த் நம்ப வைத்துள்ளார்

இந்த சம்பவங்கள் அனைத்தையும் தனது ஒன்றரை வயது குழந்தையை உடன் வைத்துக்கொண்டே ஸ்ரீகாந்த் செய்தது சிசிடிவி கேமரா காட்சிகளின் மூலம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

தலைமறைவாக உள்ள ஸ்ரீகாந்தை அலிபிரி போலீசார் விஜயவாடாவில் உள்ள ஒரு லாட்ஜில் குழந்தையுடன் தங்கியிருந்த போது நேற்று மாலை கைதுசெய்து திருப்பதிக்கு இன்று அழைத்து வந்தனர். கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்திடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.