உலகம்

பெண் உதவியாளருக்கு முத்தம்… பறிபோன அமைச்சர் பதவி…

உலகம் முழுவதும் கொரோனா என்னும் கொடிய தொற்று பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட நாடுகளில் கடுமையான சுகாதார நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன .

இங்கிலாந்தில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில் பொது இடங்களில் கை குலுக்குதல், கட்டித்தழுவுதல் . முத்தம் கொடுத்தால் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தனது உதவியாளரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இங்கிலாந்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் மாட் ஹான். சமூக இடைவெளி விதிமுறைகள் அமலில் உள்ள சூழலில் இவர் தனது உதவியாளரான ஜீனா கோலண்டேஞ்சலோவுக்கு முத்தம் கொடுத்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

Matt Hancock pictured kissing married woman he's accused of having affair  with - Mirror Online

இதுதொடர்பான புகைப்படங்கள் அந்நாட்டில் வெளியாகும் பிரபல நாளிதழில் வெளியானது. இருவரும் வெவ்வேறு நபர்களை திருமணம் செய்துள்ள நிலையில் தவறான தொடர்பில் இவர்கள் இருப்பதாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டது.

UK health secretary Matt Hancock resigns after being caught kissing on  camera - Independent.ie

மாட் ஹான்க் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் இது தொடர்பாக மன்னிப்பும் கோரினார். மாட் ஹான்கின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாக போரிஸ் ஜான்சன் அறிக்கை வெளியிட்டார். ஆனால் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் விடுவதாக இல்லை. மாட் ஹாக் உடனடியாக பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. தனது சொந்த கட்சியிலும் மாட் ஹான்க்-க்கு எதிராக குரல்கள் வலுத்தன.

British health minister Hancock resigns after kiss affair – politics

இந்நிலையில் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக மாட் ஹான் அறிவித்தார். இதுதொடர்பான கடிதத்தை பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் வழங்கினார்.

மாட் ஹான்க் உதவியாளரான ஜீனா கோலண்டேஞ்சலோவும் தனது பதவியை ராஜினாமா செய்தார். மாட் ஹான்க் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட போரிஸ் ஜான்சன் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக ஷாஜித் ஜாவித் என்பவரை நியமித்துள்ளார்.