அரசியல்தமிழ்நாடு

கொரோனா தொற்றை பூஜ்ஜியமாக்க முதலமைச்சர் பணியாற்றி வருகிறார்: அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் கொரோனா தொற்றை பூஜ்ஜியமாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக பணியாற்றி வருவதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகள் வீட்டுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த பயன்படும் வாகனங்களை மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூரில் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தொற்றை பூஜ்ஜியமாக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருவதாக கூறினார். கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மக்கள் தம்மை காத்துக்கொள்ள தடுப்பூசி சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

பின்னர் அங்கிருந்து பெரியகுளத்துப்பாளையத்திற்கு சென்ற அமைச்சர், பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். மக்களின் தேவை அறிந்து அதனை செய்து தரும் அரசுக்கு மக்கள் வாக்களித்துள்ளதாகவும், மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைவில் தீர்வு காணப்படும் என்றார். மேலும் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதி கூறினார்.

உடனடியாக தீர்வுக்கணாபப்டாத மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்றும் மக்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.