சினிமா

ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் வலுப்படுத்திய பீஸ்ட்..! வெளியானது தளபதியின் பீஸ்ட் 2வது லுக் போஸ்டர்!

இந்தியாவில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் நடிகர் விஜய்யின் பிறந்தநாள் இன்று . தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மாலையே ’விஜய் 65’ படத்தின் தலைப்பையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது .

’மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் தனது 65 வது படத்தில் நடித்து வருகிறார் . பூஜா ஹெக்டே, பூவையார், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் மாஸ்ஸான இரண்டாவது லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. வெளியிட்ட சில மணிநேரங்களிலேயே 1,49,500க்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். 67,500க்கும் அதிகமானோர் ரீட்வீட் செய்துள்ளனர்.

பீஸ்ட் திரைப்படத்தின் இரண்டு போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதை வைத்து பார்க்கும்போது பீஸ்ட் படத்தை காண ரசிகர்கள் வழக்கத்தை விட அதிக ஆர்வமுடன் இருப்பது நன்றாக தெரிகிறது.