ஜூலை 15 வரை 1000 ரூபாய் பாஸ் செல்லும் – போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்
மே மாதம் வாங்கிய 1000 ரூபாய் மாதாந்திர பாஸ் ஜூலை 15 வரை செல்லும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கிட்டத்தட்ட ஒருமாதத்திற்கு பிறகு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியதாவது :
சென்னையில் அரசு பேருந்துகள் இரவு 9.30 மணிவரை இயக்கப்படும் என்றும் . 16.05.2021 முதல் 15.06.2021 வரை பயணம் செய்யும் வகையில் 1000 ரூபாய் பாஸ் வாங்கியவர்கள் அந்த பாஸை ஜூலை 15ஆம் தேதிவரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
